பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1095

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量盟

ஒருவரும் ஆக அமைந்த அந்தணர் வடிவங்கள் மூன்றும் மூவாயிரவராகிய தில்லைவாழந்தணரைக் குறிப்பன. அடுத் துள்ளது தில்லைப் பெருங்கோயிலின் தெற்குக் கோபுர வாயில். அதனுட்புறத்தே திருநாளைப் போவராம் மறை முனிவரை வணங்கி வரவேற்கும் நிலையில் அமைந்தது தில்லைவாழந்தனர் திருவுருவமாகும்.

19. திருக்குறிப்புத் தொண்ட காயனர் :

வலமிருந்து இடம் : கோலூன்றி நிற்பவர் சிவனடி யாராக வந்த இறைவர். அவரது ஆடையினைத் துவைத்துத்தரும் கருத்துடன் எதிர் நின்று வாங்குபவர் திருக்குறிப்புத் தொண்டர் எதிர்பாராது பெய்த மழை யினுல் குறித்த காலத்தில் துவைத்து உலர்த்திக்கொடுக்க இயலாத நிலையினராகிய திருக்குறிப்புத்தொண்டர் தம் தலையைப் பாறையில் மோதப்புகுதலும், அப்பாறையின் மருங்கு திருவேகம்பரது திருக்கை வந்தெழுந்து அவர் தலையினைப் பிடித்தலும் ஆகிய காட்சி அடுத்து அமைக்கப் பெற்றுளது. அடுத்துள்ளது சேய்ஞலூர்ப் பிள்ளையா ராகிய சண்டேசர் திருவாத்தியின் கீழ்ச் சிவலிங்கப் பெரு மானுக்குப் பாலாட்டி வழிபடுங் காட்சியாகும். இது 20, 20 A என்னும் எண்ணுள்ள சேய்ஞலூர்ப் பிள்ளை யார் (சண்டேசர்) கதையின் முற்ருெடர்ச்சியாகும்.)

20. சேயஞலூர்ப் பிள்ளையார் கதை :

வலமிருந்து இடம் சண்டேசர், சிவலிங்கத் திரு மேனியின் மேல் பாலாட்டுதலும் அது கண்டு வெகுண்ட தந்தை எச்சதத்தன் பாற் குடத்தைக் காலால் இடறு தலும்.

(20) A. பாற்குடத்தைக் காலால் இடறிய தந்தை யின் இருகால்களையும் சண்டேசர் மழுவினுள் வெட்டுதலும், அம்மையப்பராகிய இறைவன் தம் சடைமுடிமே லுள்ள கொன்றை மாலையினை வாங்கிப் பிள்ளையார் முடியிற் சூட்டி அருள்புரிதலும். இச்சிற்பம் ' மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினுல் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கடி யேன்” என வரும் திருத்தொண்டத் தொகைக்குரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.