பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

கருத்தைச் செலுத்திக் கபாலநடு மறைமூலந் திறப்ப உயிரைச் செலுத்திக் கயிலையை யடைந்து அம்மையப்பர் திருவடிகளை இறைஞ்சி நிற்கும் நிலையிலும் இருவடிவங்கள் அமைந்துள்ளமை காண்க

24. காரைக்காலம்மையார் :

காரைக்காற் பேயாராகிய அம்மையார், இரு கைகளை யும் தரையிலுான்றித் தலையால் நடந்து கயிலாய மலையை நோக்கிச் செல்லுந் திருக்கோலம் இச் சிற்பத்தின் நடு விலே அமைக்கப்பெற்றிருப்பதும், அம்மையார் தலையால் நடந்து செல்லும் வழி காடும் மலையுமாக அமைந்தமை புலப்பட அதன் இரு பக்கங்களிலும் மான் யானை முதலிய விலங்குகள் அமைக்கப் பெற்றிருப்பதும் காணத்தக்கன.

25. அப்பூதியடிகள் :

வலமிருந்து இடம் : (1) அப்பூதியடிகள் தண்ணிர்ப் பந்தரில் வழியிற் செல்வார்க்கு நீர்வார்த்தல் ; (2) (நடு வில்) திருநாவுக்கரசர் அமர்ந்திருந்து திருநீறளிக்கும் நிலையில் மேலும் கீழுமாக இருவகைத் திருக்கோலம், (கீழே யுள்ளது மூத்த திருநாவுக்கரசு எங்கே என உளத்தடு மாற்றத்துடன் வினவும் நிலையையும், மேலேயுள்ளது, ஒன்றுகொலம் எனப் பதிகம்பாடி அவன் உயிர் பெற். றெழ இறைவனருளில் திளைத்திருக்கும் நிலையையும் குறிக் கும் முறையில் அமைக்கப்பெற்றிருத்தல் கூடும்) ; (3) தலை மேற் குவித்த கையினராகி நிற்கும் அப்பூதியடிகள் தாள மிட்டுத் திருப்பதிகம் பாடும் திருநாவுக்கரசருடன் திருப் பழனப் பெருமானப்பரவிப் போற்றுதல் என இச்சிற்பத்தில் மூவகைக் காட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளமை காண்க.

26. திருநீலகக்க காயஞர் :

திருநீலநக்கர் திருச்சாத்த மங்கைத் திருக்கோயிலில் இறைவனுக்கு வழிபாடு செய்து முடித்துத் திருவைந் தெழுத்தோதி அமர்ந்திருக்கும் நிலையில், சிவலிங்கத் திரு மேனியிற் சிலந்தியொன்லு விழுதலேக் கண்ட அவர்தம் மனைவியார் அன்புடன் விரைந்து சென்று சிவலிங்கத் திரு மேனியில் வாயினுல் ஊதித் துமிய, அதுகண்டு பொருது அனுசிதம் செய்தார் என்று அவரைப் பிடித்து விலக்குதல்.