பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6

31. தண்டியடிகள் நாயனுர் :

பிறவிக் குருடராகிய தண்டியடிகள், திருவாரூர்த் திருக்குளத்தினைத் தோண்டும் பணியில் ஈடுபட்டு மண்ணை வெட்டியெடுக்கும் குழியிடத்தே முளையடித்துக் கயிறு கட்டி அக்கயிற்றைப் பற்றிக்கொண்டு மண்ணை அப்புறத்திற் கொண்டு செல்லுதலும், அதுகண்டு பொருத சமணர்கள் அத்திருப்பணிக்குத் தடையாய் நிற்றலும். (தண்டியடிகள் பிறவிக்குருடர் என்பது புலப்பட இச்சிற்பத்திலுள்ள அவர் முகத்தில் கண்கள் உட்குழிந்தனவாய் அமைக்கப் பெற் றுள்ளமை காண்க.)

32. மூர்க்க காயனர் :

இச்சிற்பத்தில் மேலும் கீழுமாக இரண்டு நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டுள்ளன. கீழுள்ள சிற்பம் மூர்க்க நாயனுர் சூதாடிப் பொருளிட்டலைக் குறிப்பது. மூர்க்க நாயனுர் தாம் சூதாட்டத்தால் ஈட்டிய பொருளைச் சிவனடியார்க்குத் திருவமூதாக்க அளிக்கும் முறையில் அமைந்தது மேலுள்ள சிற்பமாகும்.

33. சோமாசிமாறனர் :

தம் மனைவியாருடனிருந்து சிவபெருமானைப் போற்றும் வேள்வியைச் செய்தல். இச்சிற்பத்தில் உயர்ந்த ஆசனத் தில் அமர்ந்து வேள்வி செய்பவர் சோமாசி மாறர். அவர்க்கு எதிரே வேள்வித் தீயினை வழிபடும் நிலையில் குவித்த கைகளுடன் மற்ருேர் ஆசனத்தில் அமர்ந்திருப் பவர் அவருடைய மனைவியாராவர். இவ்விருவர்க்கும் நடுவே வேள்விக் குண்டத்தில் வேள்வித்தீ சுடர்விட்டு மேலோங்கியெழுதல் காண்க.

34. சாக்கிய காயனர் :

சாக்கியனுர் உமையொருபாகனுகிய இறைவனை மற வாது கல்லெறிந்து வழிபடுதல். (சிவலிங்கத் திருமேனி யிற் சாக்கியர் கல்லெறிந்து வழிபட்டதனைக் குறிக்கச் சிற்பத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனியின்மேல் இரண்டு கற்கள் புலப்படும் நிலையில் இச்சிற்பம் அமைக்கப்பெற்றிருத் தல் நோக்குக.)