பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ரொருவர் அமர்ந்து குடைபிடிக்க, உரிமைப் பரிசனர்கள் உடன்வர நகர்வலம் வரும் காட்சியும், இங்ங்னம் யானை மேல் உலாவரும் சேரமான், உவர் ஊறி மேனி வெளுத்த வண்ணுளுெருவனை நெடுந்தொலைவிற் கண்டு சிவனடியார் எனக்கொண்டு யானையின் கழுத்தினின்றும் இறங்கி நின்று இருகைகளையும் தலைமேற் குவித்துத் தொழ, அதுகண்டு சிந்தை கலங்கிய வண்ணுன், யாரென்று அடியேனை க் கொண்டது? அடியேன் அடிவண்ணுன் என்று சொல்லி இறைஞ்சி நிற்க, அடியேன் அடிச்சேரன் என்று கூறி நிற்கும் காட்சியும் இதன்கண் இடம் பெற்றுள்ளமை காண லாம். இதன் கண் அடியார் வேடத்தை நினைப்பித்த வண்ணுனது உருவம் இங்குள்ள நிழற்படத்தில் எடுக்கப் படாது விடுபட்டது. இச்சிற்பம் பெரிய புராணம் சேரமான் பெருமாள் நாயனர் புராணத்தில் 17, 18, 19-ஆம் செய்யுட் களிற் கூறப்பட்ட நிகழ்ச்சியினை விளக்கும் முறையில் அமைந்திருத்தல் அறியத்தகுவதாகும்.

கழறிற்றறிவாராகிய இவர் சேரநாட்டு வேந்தராய் முடி சூட்டப்பெற்றுத் திருவீதியில் உலாவரும்போது உவர் மண்ணுாறிய மேனியினை யுடைய வண்ணுனைக் கண்டு சிவனடியார் வேடம் என்று தொழுத அன்பின் பெருமை குறித்து இவ்வேந்தர் பெருமானுக்கு வண்ளுனைக் கும்பிட் டார் என்றதொரு பெயரும் வழங்குவதாயிற்று.

இனி, இச்சிற்பம் சேரமான் பெருமாள் பாணபத்திரரை வரவேற்ற செய்தியைக் குறிப்பதென்று தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையினரும் சுந்தரரும் சேரமானும் யானையின் மீது அம ந்து திருக்கோயிலுக்கு ஏகியதைக் குறிப்பதென்று டாக்டர் மா. இராசமாணிக்களுர் அவர் களும் கருதுவர். திருவாலவாயிறைவர் அருளிய திருமுகத்துடன் வந்த பாணபத்திரர் சேரமான் பெருமாளது அரண்மனையை யடைந்து தாம் வந்த செய்தியை வாயில் காவலர் மூலம் அரசர்க்கு அறிவிக்க அறிந்த சேரமான் மாளிகையின் புறத்தில் எதிர் வந்து பாணபத்திரரை

i. S. I. H. Vol. Włłł No. 533.

2 தென்னிந்தியக் கல்வெட்டுத்துறை, 1920-ஆம் ஆண்டு அறிக்கை.

3. பெரிய புராண ஆராய்ச்சி, பக்கம் 72, 73.

$3