பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

விக்கும் நிலையிற் கணநாத நாயனர் திருவுருவம் ஒன்றும், அம்மையப்பராய் விடைமேற் ருேன்றும் இறைவனைக் கண்டு கைகுவித்து நிற்கும் நிலையிற் கனநாத நாயனர் திருவுருவம் ஒன்றும் இடம் பெற்றுள்ளமை காண்க.

89. கூற்றுவ காயனர் :

வலமிருந்து இடம் : கூற்றுவ நாயனர் அரசவையில் வீற்றிருத்தல் ; கை குவித்த நிலையில் இருவர் எதிரே நிற்க மூவர் அமர்ந்திருத்தல்.

40, 40 A- பொய்யடிமையில்லாத புலவர் :

வலமிருந்து இடம் : திருவாலவாய்த் திருக்கோயிலும் புலவர் ஐவரும், 40 A-படத்திற் புலவர் நால்வரும் சங்கப் பலகையும் அமைந்திருத்தல் காணலாம். (40 - ஆம் படத்தில் வலமிருந்து இடம் ஆருவதாகத் தெரியும் புலவர் உருவம் கி0-A படத்தில் இடமிருந்து வலம் நான்காவதாக அமைந்த உருவமே என்பது நோக்கத் தக்கது)

திருத்தொண்டத் தொகையிற் பொய்யடிமையில்லாத புலவர் ' என்றது, சங்கப்புலவர் நாற்பத்தொன் பதின் மர் முதலாகவுள்ள புலவர் பலர் அடங்கிய திருக்கூட்டத்தினை என்பர் தரணியிற் பொய்ம்மையில்லாத் தமிழ்ச் சங்க மதிற் கபிலர் பரணர் நக்கீசர் முதல் நாற்பத் தொன்பது பல் புலவோர் ' எனக் குறித்தார் நம்பியாண்டார் தம்பிகள். நம்பியாண்டார் நம்பி குறித்த நாற்பத் தொன் பதின்மர் ஆகிய புலவர் பெருமக்களைக் குறிக்கும் முறையில் நாற்பத் .ெ தா து எ னு: தொகையின் எச்சமாகப் புலவர்கள் திருவு வ. ஒ. பதும், சென்ற காலத்தவராகிய அப் புலவர்கள் பொய்மையில்லாத் தமிழ்ச் சங்கத்திலிருந்து புலமைத் திருப் பணி புரிந்தவர்கள் என்பது புலப்படச் சங்க மண்டபமும், அப்புலவர் பெருமக்கள் திருவால வாயரன் சேவடிக்கே பொருள மைத்து இன்பக் கவி பாடும் இயல் பினர் என்பது புலப்படத் திருவாலவாய்த் திருக் கோவிலும் இச்சிற்பத்தில் இடம் பெற்றுள்ளமை காண்க. இதனுல், பொய்யடிமையில்லாத புலவர் என்போர் தனியடிகாரல்லர் தொகையடியார்களாகிய திருக் கூட்டத் தி ைரே என்னும்,உண்மை நன்கு வலியுறுதல் காணலாம்.