பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமர்த்தித் திருவடிகவே விளக்கப்புகும் நிலையில் மனைவியார் அவ்வடியவரைப் பழைய ஏவலாள் எனத் தெரிந்து தண்ணிர் வார்க்கத் தாழ்க்கக் கலிக்கம்பர் மனை வியின் கையினை வாளிளுல் தடிதலும், இறைவன் மாதொரு பாகராக விடைமேல் வந்தருள் புரிதலும்,

45, 45-A கலியநாயனர்

வலமிருந்து இடம் , 45-ல் கலியனர் செக்கு ஆட்டு தலும், 46-A இல் பொருளின்றி எண்ணெய் கிடைக்கப் பெருத நிலையிற் கலியனுள் திருவொற்றியூர்த் திருக் கோயிலில் அகல் அமைத்துத் திரியிட்டுத் தம் உடம்பின் உதிரத்தால் திருவெளக்கெரிக்க எண்ணித் தமது மிடற்றினைக் கருவியினுல் அரியத் தொடங்குதலும். (மிடற்றை அரியப் புகும் கலியனர் திருவுருவத்தின் முன் திருவொற்றியூர்த் திருக்கோயிலும் அக்கோயிலிற் சர விளக்கும் அமைக்கப் பெற்றிருத்தல் காண்க)

46. சத்தியாண்டார் :

இடமிருந்து வலம் : வணங்கிய கையினராய் நிற்கும் சிவனடியாரை இகழ்ந்த ஒருவனது நாவினை வாங்கு தண்டாயமாகிய குறட்டால் வலித்திழுத்துச் சத்தியார் கத்தியால் அரிதலும் அவ்வாண்மைத் திருப்பணியைச் சிவனடியார் மூவர் உடனின்று காணுதலும்.

47, 47-A, ஐயடிகள் காடவர்கோன் நாயஞர்

ஐயடிகள் கா. வர்கோன் நாயனுர் ஒவ்வொரு திருக் கோயிலின் முன் நின்றும் ஒரேசர் வெண்பாப்பாடி இறைவனை வழிபடும் நிலேயில் நான்கு சிற்பங்கள் அமைந் துள்ளன. ஐயடிகள் நாற்றிசைகளிலும் உள்ள திருத் தலங்களைப்பாடி வழிபட்டுப் போற்றிஞர் என்னும் குறிப்புணர இவ்வாறு நான்கு சிற்பங்கள் அமைக்கப் பெற்றிருத்தல் கூடும் சனக் கருத வேண்டியுளது.

48. கணம்புலாண்டார் :

வலமிருந்து இடம்: தில்லையிலுள்ள திருப்புலிச்சரத் திருக்கோயிலில் யாமந்தோறும் திருவிளக்கேற்றும் இயல்