பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. முனையடுவார் :

வலமிருந்து இடம் : முனையடுவார் நாயனர் போரிற் பகைவஞெருவனை வேற்படையாற் பொருது அழித்த வீர நிலையிலும், பகைவரை வென்று தாம் பெற்ற பொருளைக் கையிற்கொண்டு ஈசனடியார்க்கு அன்புடன் அளிக்கும் ஈர அன்பின் நிலையிலும் முனையடுவாரைக் குறித்து இருவேறு திருவுருவங்கள் இச்சிற்பத்தில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

53. கழற்சிங்களுர் :

கழற்சிங்க நாயஞர், தம் பட்டத்தரசி திருவாரூர்த் திருக்கோயிற் பூமண்டபத்திற் கீழே கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தமை யறித்து, அப்பூவினை எடுத்த அவளுடைய கைகளை வாளால் தடிதல். (இச்சிற்பத்தில் பட்டத்தரசியின் இரு கைகளிலும் வாளின் வெட்டுப் பதிவுகள் புலப்பட அமைக்கப்பட்டமை காண்க.)

54. இடங்கழியாண்டார் :

வலமிருந்து இடம் : ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் இடங்கழி ந யஞராகிய வேந்தர். அவர் அருகே நிற்பவர் பறையறையும் ஏவலர். பஞ்ச காலத்தில் இறைவனடி யாரை அமுது செய்விக்கும் தமது செயல் தடைப் படாதபடி அன்பரொருவர் அரசர் க்குரிய நெற்கூட்டில் தள்ளிரவிற் புகுந்து களவுகொண்டமையறிந்த இடங்கழி நாயனர், இவரன்ருே எனக்குப் பண்டாரம் எனக் கூறி, என் செல்வமனைத்தும் சிவனடியார்கள் கவர்ந்து கொள்க ! எனப் பறையறையச் செய்த வரலாற்றினை விளக்கும் முறையில் இந்தச் சிற்பம் அமைந்திருத்தல் அறியத் தகுவதாகும்.

55, 55 A. செருத்துணையாண்டார்:

படம் 55-ல் வலமிருந்து இடம் : திருவாரூர்த் திருக் கோயிலின் திருப்பூமண்டபத்தில் அடியாரொருவர் அமர்ந்து மலர்மாலே தொடுத்தலும், பல்லவ மன்னன் தேவி அங்குக் கீழே வீழ்ந்து கிடந்த மலரைக் கையால் எடுத்து முகர் தலும்,