பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 99

இரண்டாம் இராசசிம்ம பாண்டியனுடைய மகளுகிச் சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து ஆண்ட முதல் வரகுண வர்மனே திருச்சிற்றம்பலக் கோவையிலும் பதினுெராந் திருமுறையிலும் சிறப்பிக்கப்பட்ட சிவபத்திச் செல்வம் வாய்ந்த வரகுண பாண்டியளுவனென்பது திருவாளர் சதாசிவ பண்டாரத்தாரவர்கள் துணியாகும். இக்கொள்கையை வலியுறுத்தற்கேற்ற சான்றுகள் பல இவர்களால் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. 1 முதல் வரகுண்ணுகிய இவ்வேந்தனைக் கொற்றவர்கள் தொழு கழற்காற் கோவரகுண மகாராசன் ” எனச் சின்ன மனுார்ச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. இவனது ஆட்சியின் நாலாமாண்டுக் கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் திருவியலூர் திருநெய்த்தானம் என்ற ஊர்களிலும், ஆறு, எட்டு, பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் முறையே ஆடுதுறை, கும்பகோணம், செந்தலை ஆகிய ஊர்களிலும் பதினுெராம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி, திருக்கோடிகா என்ற ஊர்களிலும் ஆண்டழிந்து போன கல்வெட்டொன்று திருச்சோற்றுத்துறையிலும் இருத்தலால் சோம மண்டலம் வகம் தல் வரகுணன ஆட்சிக்

@JLP(9态 கு చెప్తే

குட்பட்டிருந்ததென்பது நன்கு தெளியப்படும்.

கி. பி. 795 முதல் 846 வரையில் அரசுபுரிந்த தந்திவர்ம பல்லவனுடைய கல்வெட்டுக்கள் சோழநாட்டிற் காணப்பட வில்லை. முதல் வரகுண பாண்டியனுடைய கல்வெட்டுக்கள்

母 .% بينية ؟

சோழநாட்டிற் காணப்படுகின்றன. இவற்றைக் கூர்ந்து க்குங்கால் தந்திவர்ம பல்லவனது ஆட்சிக்காலத்தில் தான் இவ்வரகுண பாண்டியன் சோழ நாட்டின்மேற் படை யெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றியிருத்தல் வேண்டு மென்பது நன்கு புலனுகும். இவ்வேந்தன் சோழநாட்டி லுள்ள வேம்பில்’ என்னும் ஊரின் மதிலேயழித்து நியமம் என்ற ஊரில் தங்கியிருந்த பொழுது திருச்சிராப்பள்ளி யிறைவற்குத் திருவிளக்கெரிக்க 25 கழஞ்சு பொன் நிபந்த மளித்துள்ளான். இம்மன்னன் தொண்டைமண்டலத்தில்

1. Frqui வரலாறு இரண்டாம் பதிப்பு) பக்கம் 58 - 63.

2. வேம்பில் என்ற ஊர் இப்பொழுது திருவிடைமருதுரையடுத் துள்ள வேம்பத்து ரெனக் கருதப்படுகின்றது.

3. Annual Report on Archaeological survey of India 1903–04 Page 275.