பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பன்னிரு திருமுறை வரலாறு


பெண்ணையாற்றங்கரையிலுள்ள அரசூரில் தங்கியிருந்த பொழுது அம்பாசமுத்திரத் திருக்கோயிலுக்கு நாள் வழிபாட் டிற்கென 290 பொற்காசுகள் நிபந்தமளித்துள்ளான். ' திருவிடைமருதினை யடுத்துக் காவிரிக்கு வடகரையிலமைந்த இடவையென்பது இவ்வேந்தன் காலத்தில் பாண்டியர் தங்கி ஆட்சிபுரிதற்குரிய அரணுடைய ஊராயிற்றென எண்ண வேண்டியுளது. இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில்தான் இவன் திருவிடைமருதீசர்பால் அளவிலாப் பேரன்பு வைத்து ஒழுகியிருத்தல் வேண்டும்.

பல்லவர் ஆட்சியைச் சோழ நாட்டிலிருந்து விலக்கிய பெருவீரளுகிய இவ்வேந்தன், சோழ நாட்டின் சிறப்புடைச் சிவதலமாகிய தில்லைப்பதியில் எழுந்தருளிய கூத்தப்பெரு மானைப் போற்றிப் பரவுதலைத் தனக்குரிய நீங்கரக் கடமை யாகக் கொண்டிருந்தானென்பது திருச்சிற்றம்பலக்கோவை யில் குறிப்பிடப்பட்டது. வரகுணனும் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் ” எனத் திருவாதவூரடிகள் நிகழ்காலத்து வைத்து இவ்வேந்தனைச் சிறப்பித்தலால் திருவாதவூரடிகள் திருச்சிற்றம்பலக்கோவை பாடியது இவ்வேந்தன் காலத்தி லென்று தெரிகிறது. அன்றியும் இவனுற் போற்றி வழிபடப் பெற்ற இடைமருதினையும் அதன்மருங்கே இவனுக்குரியதாய் விளங்கிய இடவையென்னும் நகரில் வாழ்ந்த மடநல்லாள் ஒருத்திக்கு இறைவன் அருள்செய்த திறத்தையும் திருவாச கத்துள் அடிகள் குறித்துப் போற்றுதலும் இதனை வலி யுறுத்தும்.

திருச்சிற்றம்பலக்கோவையாரிற் குறிக்கப்பட்ட வரகுண பாண்டியன் தமிழ்நாட்டில்கல்வெட்டுகள் உண்டாவதற்குமுன் அதாவது கி. பி. 4-ஆம் நூற்ருண்டுக்குமுன் இருந்தவன் என்பர் மறைமலையடிகள். கி. பி. நான்காம் நூற்ருண்டிற்கு முன்னிருந்த தமிழ் வேந்தரெல்லோரும் தனித் தமிழ்ப் பெய ரால் வழங்கப்பெற்றுள்ளார்கள். அவர்களுள் எவரும் வட மொழிப் பெயர்களைத் தமக்குரிய பெயர்களாகப் புனைந்து

1. Ep. Ind. Voi. IX, No. 10. (Ins. 405 of 1905),

2. இடைமருதீசன் அருள் பெற்ற இடவை மட நல்லாள் எனத் திருவாதவூரடிகள் குறித்துப்போற்றிய அம்மையார் பட்டினத்தடிகள் கூறிய பெரிய அன்பின் வரகுண தேவரது புரிகுழற்றேவியாகவும் இருத்தல் கூடுமென்று எண்ண இடமுண்டு. இச் செய்தி அறிஞரது ஆராய்ச்சிக்குரியதாகும்.