பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

62, 62 A. முக்காலும் திருமேனி தீண்டுவார் :

இவ்விரு படங்களும் ஒரே சிற்பத்தின் தொடர்ச்சி யாகும். இச்சிற்பத்தில், அடியார் ஒருவர் சிவலிங்கப் பெருமானை வழிபாடு செய்யும் முறையில் மூவகைத் தோற் றங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூவகைத் திருமேனி களும் காலே நண்பகல் மாலே என்னும் மூன்று பொழுது களிலும் திருக்கோயில்களில் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி வழிபடும் திருக்கூட்டத்தாரின் மூவகை நிலை களைக் குறிக்கும் முறையில் அமைக்கப் பெற்றிருத்தல் காணலாம். இதன் கண் இடமிருந்து வலம் : முதற்கண் உள்ள அடியாரின் திருமுன் முக்காலியின் மேல் அர்க்கிய பாத்திய ஆசமனத்திற்குரிய நன்னிசைக் கொண்ட சங்கு வைக்கப்பெற்றிருத்தலும், அதன்மேலாக மண்டபத்தில் மணியொன்று கட்டப்பெற்றிருத்தலும், முப்போதும் திரு மேனி தீண் டுவார் செய்யும் இப்பூசை தனியொருவர் தம் பொருட்டுச் செய்யும் (ஆன்மார்த்த) பூசையைக் குறிக்கா மல், அவர் உலகத்தார் பொருட்டுச் செய்யும் (பரார்த்தர் பூசையினைக் குறிப்பனவாகும்.

63, 83 A. முழுநீறு பூசிய முனிவர் :

இவ் விரு படங்களும் ஒரே சிற்பத்தின் தொடர்ச்சி

யாகும். வலமிருந்து இடம் : திருக்கோயிலின் திருமுன்றி லில் உடம்பு முழுவது திருநீறு பூசிய டிடியார்கள் அதுவர் அமர்ந்துள்ளனர் இச்சிற்பத்தில் உள்ள அடியார் திரு வுருவங்கள் ஆறும் சைவ சமயத்தினைச் சார்ந்த அறுவகை அகச்சமயங்களை மேற்கொண்டொழுகும் அடியார்கள் அறுவரையும் குறிக்கும் திலையில் அமைந்தன.

84. அப்பாலும் அடிச்சார்ந்தார் :

இதன்கண் வலமிருந்து இடம்: சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோயிலும் அத்திருக்கோயிலே இறைஞ்சிப் போற்றும் நிலையில் அடியார் திருவுருவங்கள் மூன்றும் இடம் பெற்றிருத்தல் காணலாம். நம்பியாரூரரால் திருத்தொண்டத் தொகையில் அப்பாலும் அடிச்சார்ந் தார்’ எனப் போற்றப் பெற்ற இத் திருக்கூட்டத்தார், நம்பியாரூரர் காலத்திற்கும் அவர் நிலவிய தமிழகமாகிய