பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

67. கேசாண்டார் (நேசநாயஞர்) :

இதன் கண் இடமிருந்து வலம் : முதலில் நிற்கும் இரு திருவுருவங்களில் இரண்டாவதாக அமைந்தது நேச நாயனர் திருவுருவமாகும், நேசநாயஞர் அளிக்கும் கோவன ஆடையைப் பெறும் நிலையில் முதற்கண் நிற்கும் அடியார் திருவுருவம் இப்படத்திற் சிறிது மறைந்துள்ளது.

68. கோச்செங்கட்பெருமாள் :

வலமிருந்து இடம்: கோச்செங்கட் சோழர் தாம் அமைத்த திருக்கோயிலக் கைதொழுது நிற்றல். (அடுத்துக் காணப்பெறுவது கலியான சுந்தரராகிய இறை வரது திருவுருவமாகும்).

69. திருநீலகண்டப்பெரும்பானர் :

இ. மிருந்து வலம் : மனைவியார் மதங்க சூளாமணி யார் தாளமிட்டு இசைபாடத் திருநீலகண்டப்பெரும்பாணர் சகோடயாழினை வாசித்து இறைவன் திருக்கோயிலை வழி படுதல். கையில் தாளங்கொண்டு பாடும் நிலையில் மதங்க சூளாமணியார் வடிவமும் யாழ்க்கருவியை வாசிக்கும் நிலையிற் பெரும்பாணச் வடிவமும் அவர் கையில் ஏழுக்கு மேற்பட்ட நரம்புகளைக் கொண்ட யாழ்க்கருவியின் உருவச் சாயலும் இச்சிற்பத்தில் இடம்பெற்றுள்ளமை காண்க.

70. சடையனுர் :

இரு கைகளையும் குவித்து நின்று இறைவனை வழி படும் நிலையில் சடையநாயனரது திருவுருவம் அமைந் துனது.

71. இசை ஞானியார் :

இரு கைகளையும் குவித்து நின்று இறைவனை வழி படும் நிலையில் இசை ஞானியாரது திருவுருவம் அமைந் துளது. (இவ்வாறு நிகழ்ச்சியெதனையும் குறிப்பிடாத நிலையில் அமைக்கப்பெறும் அடியார் திருவுருவங்கள் நெஞ்சிற் குவித்த கைகளுடன் அமைக்கப்பெறுதல் வேண்டும் என்பது. சடையஞர் இசைஞானியார் திருவுருவ அமைப்பால் இனிது விளங்குதல் காணலாம்).