பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

72. கம்பியாரூரர் :

திருத்தொண்டத் தொகையிற் போற்றப் பெற்றுள்ள அடியார்களின் வரலாற்றுச் செய்திகளைக் குறிக்கும் முறை யில் அமைக்கப் பெற்ற இச்சிற்ப வரிசையில் திருத்தொண் டத் தொகையினை அருளிச் செய்த நம்பிய ரூசரின் வர லாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் பின்வருமாறு ஏழு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

(1) உடையகம்பி எழுந்தருளுகிருர் : 72 A, 72 B இவ்விரு படங்களும் ஒரு தொடர்ச்சி தம்பிரான் தோழராகிய நம்பியாரூசர் நங்கை பரவையாரை மணந்து அவருடன் விளையாடி மகிழ்பவர், பரிசனங்கள் தம்மைச் சூழ்ந்து உடன் வரத் திருவாரூர்ப் பெருமான வழிபட எழுந்தருளுதலைக் குறிப்பது இச்சிற்பமாகும். இதன் கண் இடமிருந்து வலம் : நம்பியாருனர், நங்கை பரவையார், தோழி, விளையாட்டுக்குரிய ஆட்டுக்கிடாவை ஒட்டிச் செல்லும் நிலையில் ஏவலர் ஒருவர் அவரையடுத்துப் பிற விளையாட்டுப் பொருள்களை ஏந்திச் செல்லும் ஏவலர் நால்வர் இடம் பெற்றுள்ளமை காணலாம். நம்பியாரூரர் திருவாரூர்த் திருவீதியில் எழுந்தருளிய இச் சிறபபினைக் குறித்து,

  • கைக்கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்

பக்கமுள் போதுவார்கள் பயில்மொழி பயிற்றிச்செல்ல மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப்பை யோச் சூழ மைத்தடங் கண்ணிஞர்கள் மறுகநீள் மதுகில் வத்தார் .

(பெரிய - தடுத்தாட் - 187) எனச் சேக்கிழாருளிய திருவாக்கும் இச் சிற்பமுய ஒத்து அமைந்திருத்தல் இங்கு நினைத்தற்கு யதாகும்.

நம்பிய ரூசர் வரலாறுகளாக இங்குக் குறிக்கப் பெற்றுள்ள சிற்பங்களுள், இச்சிற்பம், 72 (3) உடைய நம்பியையாண்டு கொண்டருளின படி என்ற சிற்பததின் பின் அமைக்கப்பெறுவதே முறையாயினு , நம்பிய ருசர் திருத்தொண்டத் தொகையினை ப் பாடுதற்குத் தோற்று வாயாக அமைந்தது அவர் பரிசனங்கள் சூழத்திருவாரூர்த திருக்கோயிலுக்கு எழுந்தருளிய இந்நிகழ்ச்சியேயாதலால் நம்பியாரூரர்க்குரிய வரலாற்று நிகழ்ச்சிகளுள் இதுவே முதலிடம் பெறுவதாயிற்று.