பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 霹且

கொண்டதில்லை. வரகுணன் என்ற பெயர் தமிழும் வட மொழியும் கலப்புற்ற காலத்தில் தோன்றிய பெயர். ஆகவே இப்பெயராற் குறிக்கப்படும் இப்பாண்டியனைப் பாண்டி நாட்டிற் களப்பிரர் ஆட்சிக்குப் பின் தோன்றிய பாண்டியர் களுள் ஒருவளுகவே கொள்ளுதல் வேண்டும்.

இனி, மணிவாசகராற் போற்றப் பெற்ற இவ் வரகுண பாண்டியனைக் கி பி. 880-ஆம் ஆண்டில் திருப்புறம்பயப் போரில் தோற்ற இரண்டாம் வரகுண பாண்டியனெனக் கொள்வர் தஞ்சைச் சீநிவாச பிள்ளை முதலியோர் வரகுண

சிவபத்தி மாண்பில்ை விளந்த வெற்றித் திறத் னது சவபதித மான பஞல் விளைநத அன்றறlத தறததை நம்பியாண்டார் நம்பி தாம் பாடிய கோயிற்றிருப்பண்ணியர் விருத்தத்தில் இனிது விளக்குதலானும், தில்லையம்பல வாணனை இடைவிடாது போற்றும் இயல்புடையவனுகத் தம் காலத்து விளங்கிய தென்னவர் பெருமான் வரகுண பாண்டியன் என்பதனைத் திருவாதவூரர் தெளிவாகக் கூறுத லானும், பட்டினத்தடிகள் வாய்மொழியானும் பெரிய அன் பின் வரகுண தேவராகிய இவ்வேந்தர் பெருந்தகை நெடுங் காலம் சோழ நாட்டில் தங்கியிருந்த பெருவீரரென்பதும் தமிழ் வரலாறுடையார் கருதுமாறு திருப்புறம்பயப் போரில் தோற்ருேடியவரல்லரென்பதும் நன்கு 'புலனும். ஆதலால் ' கொற்றவர்கள் தொழுகழற்காற் கோ வரகுண மகாராசன் எனப் பாராட்டப் பெற்ற முதல் வரகுண வர்மனே மாணிக்கவாசகர் காலத்து ஆட்சி புரிந்த பாண்டியன் எனக்கொள்ளுதல் வேண்டும். இம்முடிபினை வலியுறுத்து வதாக அமைந்த மற்ருெரு செய்தியும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். தமிழ் நாட்டிலிருந்து சைவாசாரியரொருவர் ஈழநாட்டிற்குச் சென்று அங்குள்ள பெளத்த மன்னனைச் சைவ சமயத்திற்குத் திருப்பினர் என ராஜ ரத்நாகரி யென்ற நூல் கூறுகிறதென்றும், அந்நூலிற் குறித்த காலம் கி. பி. 819-ம் ஆண்டினை யொட்டியதென்றும் நெல்சன் என்பார் மதுரைச் சரித்திரத்தில் (Madura manual) குறிப்பிட்டுள் ளார். மணிவாசகப் பெருமான் வாழ்ந்த காலத்தில் சிவனடி யாரொருவர் ஈழநாட்டிற்குச் சென்று பொன்னம்பலம் என்ற திருப்பெயரைச் சொல்லி யிரந்துண்டு வந்தாரென் றும், அவரது செய்கையைக் கண்டு பொருத இலங்கைப்

  • தமிழ் வரலாறு பிற்பாகம் (நான்காம் பதிப்பு) பக்கம் 128-181.