பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

அதன் வடகரையிலுள்ள திருவையாற்றுக் கோயிலி னின்றும் ஒலம் என்றதோர் ஓசை தோன்றி விரிந்த அடையாளமும், அதன்படி ஆற்றின் நடுவிலே வழியமைந் துள்ளமையும், காவிரியாற்றுப் பெரு வெள்ளத்தில் மீன் களும் மரங்கள் முதலியனவும் செறிந்துள்ளமையும் తిఙ ఖి శ}".

இச்சிற்பத்தின்மேல் அமைந்த கல்வெட்டில் ஒல மென்றருளினபடி ' என்ற தொடரை ஒலைவென்றருளின படி எனப் பிறழக்கொண்டு தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையினர் கூறும் விளக்கம் இச்சிற்ப அமைப்புடனும் உடைய நம்பிகள் வரலாற்ருேடும் பொருந்துவதாக இல்லை.

(5) உடைய நம்பியை வேடர் வழிபறித்தபடி:

நம்பியாரூரர் சேரநாட்டிலிருந்து மீள்பவர் சேரமான் பெருமாள் கொடுத்த பொருட்பொதியினைப் பரிசனங்கள் சுமந்து உடன்வரக் கொங்குநாட்டிலுள்ள திருமுருகன் பூண்டியின் அருகே வந்தபொழுது, சிவகணங்கள் வேடர் வடிவில் வந்து ஆரூரருடன் வரும் பரிசனங்களை வழிமறித்து அவர்களிடத்தேயுள்ள பொருட்பொதிகளைப் பறித்துச் செல்லுதல்.

இதன் கண் இடமிருந்து வலம் : நம்பியாரூரரும் அவரருகே எக்காளம் ஊதும் நிலையிலும் பொதியினைச் சுமக்கும் நிலையிலும் ஏவலர் இருவரும் நிற்றலும், வேட ஞெருவன் தரையில் வீழ்ந்த நிலையில் அவர்களை வழி மறித்தலும், ம்ற்ருெரு வேடன் பொதியைச் சுமந்துள்ள அடியார் அருகே அலைக்குங் கோலினை ஓங்கி அச்சுறுத் தலும் காணலாம்.

(6) திருமுருகன் பூண்டியிற் பெற்றபடி :

வேடர்கள் பொருள்களைப் பறித்துச் சென்றதறிந்த நம்பியாரூரர், திருமுருகன் பூண்டியிலுள்ள திருக்கோயிலை யடைந்து வெருவுற வேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில்

1. தென்னித்தியக் கல்வெட்டு 1920-ஆம் ஆண்டு அறிக்கை, பக்கம் - 103,

$9