பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கீழ் வரிசையில் : இடமிருந்து வலம் : முதற்கண் அமர்ந்திருப்பவர் இருவருள் முதல்வர் கலியதாயகுரும் அடுத்தவர் சத்தி நாயனரும் ஆதல் வேண்டும். அடுத்துச் சிவலிங்கத் திருவுருவத்தினை வழிபடும் நிலவில் அமைந்த உருவம் ஐயடிகள் காடவர்கோன் நாயனுசைக் குறித்த தாகும். அடுத்து, கணம்புல்லே விளக்கெரிக்கும் நிலையிற் கணம்புல்ல நாயனரும், பொருள் விரித்துரைக்கும் நிலையிற் காரியாரும், அரசிருக்கையில் அமர்ந்த நிலையில் கின்றசீர் நெடுமாற நாயனரும், அமர்ந்து அகப்பூசை செய்யும் நிலையில் வாயிலார் நாயனரும், வான் ஏந்திய போர் வீரர் என்ற நிலையில் முனையடுவார் நாயனரும் அமர்ந்துள்ளமை காணலாம். அடுத்து, பட்டத்தரசியின் கையினைத் தடியும் நிலையிற் கழற்சிங்க நாயகுரும், முரசறைவேசன் எதிர் நிற்க, என்செல்வம் அனைத்தும் சிவனடியார்க்கு உரியது எனப் பறையறைக என அறிவுறுத்தும் நிலையில் அரசிருக் கையில் வீற்றிருக்கும் இடங்கழி நாயனரும், திருவாரூர்ப் பூ மண்டபத்தில் வீழ்ந்து கிடந்த மலரை மோந்த பல்லவ வேந்தனது பட்டத் தரசியின் மூக்கினை அரியும் நிலையிற் செருத்துணை நாயனரும் இடம்பெற்றிருத்தல் காணலாம்.

இச் சிற்பங்கள் யாவும் தாராசுரச் சிற்பங்களேயொத்துத் திருத்தொண்டத் தொகையிலுள்ள வரிசை முறைப்படி அமைக்கப் பெற்றிருத்தலேயும் தில்லைவாழந்தணராகிய மூவாயிரவரைக் குறிக்க ஆயிரத்திற்கு ஒருவர் என்ற முறையில் அந்தணர் மூவர் திருவுருவம் முதற்கண் இடம் பெற்றிருத்தலையும் நோக்குங்கால், இராசராசபுரத் திருக் கோயிற் சிற்பத்திற்கும் திருப்பனந்தாளிலுள்ள இச்சிற்பத் திற்கும் நெருங்கிய தொடர்புண்மை இனிது விளங்கும் இங்கு அப்பூதியடிகளைக் குறித்தமைந்த சிற்பத்தில் அப் பூதியார் மனைவியார் விடந்திண்டியிறந்த தம் மைந்தனைப் பாயிற் சுருட்டுதலும், மைந்தனைத் தீண்டிய பாம்பு படம் விரித்த நிலையில் வாழையிற் சுற்றிக் கொண்டுள்ளமையும் அப்பூதியார் மகளுர் மூத்த திருநாவுக்கரசு அப்பாடிகனே அமுது செய்வித்தற்கென வாழையிலையினை அரியும் நிலையில் விடந்தீண்டியிறந்து திருநாவுக்கரசரால் உயிர் பெற் றெழுந்த வரலாற்றை அறிவுறுத்தும் வரலாற்றுச் சான் ருதல் காணலாம்.

శఙ*ళఙఙ*