பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

பன்னிரு திருமுறை வரலாறு


தாங்கி எங்கும் நீக்கமறக் கலந்து நிற்கும் இயல்பும் ஆகிய இறைவனது பேரருட்டிறத்தை நினைந்துருகிய திருவாத ஆசடிகள்,

நமச்சிவாய வா அழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க

எனச் சிவபுராணத்தின் முதற்கண் சிவபரம்பொருளின் திரு வடிகளை வாழ்த்திப் போற்றுகின் ருர்,

ஐம்புலன்களால் அலைக்கப்பட்டுப் புறத்தே விரைந் தோடும் மனத்தின் வேகத்தைக் கெடுத்துப் பொறிவாயி லாகச் செல்லும் அவா ஐந்தனையும் அடக்கி உயிர்களை ஒரு நெறிப்படுத்தவல்ல பேராற்றலும், திருவருள்வழியொழுகும் அடியார்களது பிறவிப் பிணிப்பினை அறுக்கும் வன்மையும், யாவராயினும் அன்பரல்லாதாரால் அறியப்படாத அருமை யும், கைகூப்பி வணங்கும் தொண்டர்களின் உள்ளத்திலே சிறந்து விளங்கிச் செந்தேன்பொழியும் இனிமைத் திறமும், தலைதாழ்த்து வணங்கும் தொண்டர்களைத் தேவர்களும் தொழுது போற்றும்வண்ணம் உயர்நிலையில் வைத்துச் சிறப் பிக்கும் அருள் நலமும் ஒருங்குடைய இறைவன் திருவடிச் சிறப்பினை,

வேகங் கெடுத்தாண்ட வேந்தன டி வெல்க பிறப்புறுக்கும் பிஞ்ஞகன் றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க ! என வெற்றித்திறம் விளங்க விரித்துப் போற்றியுள்ளார்.

இவ்வாறு சிவபெருமான் திருவடிகளுக்கு வாழ்த்தும் வெற்றியும் கூறிய வாதவூரடிகள்,

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளு மலைபோற்றி

எண்வகைப் போற்றி வாசகத்தால் எண்குணத்தாளுகிய

வணக்கமுங் கூறினர்.