பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 篮密

எனவரும் வெண்பா அன்புடையார்பால் நிகழும் மெய்ப்பாடு களேத் தொகுத்துரைப்பதாகும். அன்புரிமைச் செயல் களாகிய இவையனைத்தும் திருவாதவூரடிகள்பால் நிகழும் நிலையில் அடிகள் இத் திருச்சதகத்தினை அருளிச் செய்துள் ளார். இச்செய்தி,

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன் விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன் னைப் போற்றி சயசய போற்றி

யென்னுங் கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே, எனவரும் இத் திருச்சதக முதற்பாடலால் இனிது விளங்கும். இறைவனது திருவருளில் ஈடுபட்ட மெய்யடியார்கள்பால் நிகழும் அன்புரிமைச் செயல் முறைகளைப் புலப்படுத்தும் முறையில் இத்திருப்பாடல் அமைந்துளது. மெய்அரும்புதல், கைதலைவைத்தல், கண்ணிர்ததும்புதல், வெதும்புதல் என்பன மெய்யின் தொழில்கள் ; உள்ளம் பொய்தவிர்தல் மனத்தின் தொழில் போற்றி சய சய போற்றி என்றல் வாக்கின்தொழில். எனவே மனமொழி மெய்யாகிய முக்கர னங்களாலும் இறைவனை வழிபட்டமை புலம்ை. என்றும் மாருத மெய்ம்மைப் பொருளாகிய இறைவனை அன்பிளுல் அகங்குழைந்து போற்றும் திருவருள் வாழ்வின் சிறப்பினை உணர்ந்து, நிலையற்ற உலகியல் நடையாகிய பொய்ம்மை யைத் தவிர்ந்தொழுகும் உறைப்புடைய மெய்த்தொண்டர் வாழ்வின் இயல்பினை விளக்கும் நிலையில் அமைந்த இத்திருப் பாடல், பத்தி வைராக்கிய விசித்திரம்' என்னும் திருச்சதகப் பொருளையும், அதன்முதற்கண் அமைந்த மெய்யுணர்தல்' என்னும் திருப்பதிகம் நுதலிய பொருளையும், இத்தகைய திருவாசகச் செழுமறையினை அருளிச்செய்து அன்புரு வாகிய திருவாதவூரடிகளது திருவுருவ இயல்பினையும் ஒருங்கேயுணர்த்தி நிற்றல் காணலாம். அடிகளின் அன்பின் திருவுருவினை நம்மளுேர் நெஞ்சக்கிழியில் ஓவியம-க எழுதி நினைவுகூரும் வகையில் அமைந்த இத்தகைய திருப்பாடல் களைத் தியான சுலோகம் எனப் போற்றுவர் வடமொழி அறிஞர்."

" இறைவா, எங்கள் உத்தமனே, இந்திரன், திருமா பிரமன் ஆகிய பெருந்தேவர்களது சிறப்புடைய வாழ்வையும்

  • திருவாசகம், திருச்சதகம் - கதிர்மணி விளக்கம் - பக்கம் 12.