பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 127

வுக்கும் புலப்படும் நிலையில் இப்பதிகத்தால் இறைவனைப் பரவிப் போற்றியுள்ளார். இதுபற்றியே இப்பதிகத்திற்குப் பொறியோடே கூட்டுதல் எனக் கருத்துரைக்கப்பட்டது. இப் பதிகத்தில் ஒன்று முதல் எட்டு வரையுள்ள பாடல்கள் அடிகள் ஆண்டவனை நோக்கித் தம் இயல்பினையும் வேட்கை யினையும் வெளியிட்டுரைப்பனவாகவும், ஒன்பது பத்தாம் பாடல்கள் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துவனவாகவும் அமைந் துள்ளன.

பொன்னிலத்திலே அழகுடன் திகழும் மாணிக்கமலை போல்வானே என்னை அடிமையாகவுடைய இறைவனே! யான், எனது நடிப்புத் திறத்தால் நின் மெய்யடியாரைப் போன்று திறம்பட நடித்து அவர்கள் திருக்கூட்டத்தின் இடையிலே ஒன்றிநின்று (அன்னேர் புகுதற்குரிய) பேரின்ப நிலையாகிய வீட்டுலகத்திற் புகுதல்வேண்டி மிகவும் விரைந்து முந்துகின்றேன். இந்நிலையில் எனது தகுதியின்மை வெளிப்படுவதன் முன் நின் பால் இடையருது செலுத்தற் குரிய பேரன்பு எனது நெஞ்சத்திலே நிலைபெற்று உள்ளம் உருகும்படி அதனை அடியேற்குத் தந்தருள்வாயாக’ எனத் தமக்கு மெய்யன்பு அருளவேண்டி இறைவனைப் பரவுவதாக அமைந்தது,

நாடகத்தால் உன் னடியார் போல் நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புணக்கென் ஊடகத்தே தின் துருகத் தந்தருளெம் உடையானே. எனவரும் திருப்பாட்டாகும்.

வெள்ளந்தாழ் விரிசடையாய் எனத்தொடங்கும் மூன் ரும் பதிகம், சுட்டறுத்தல் என்னுந் தலைப்புடையதாகும். சுட்டறுத்தல் என்பதற்குத் தன் செயலறுத்தல் , அஃதாவது உலகப்பொருள்களைச் சுட்டியறிதலாகிய ஆன்மபோதத்தை ஒழித்தல் என்பது பொருள் உயிர்கள் ஐம்பொறிகள் முதலிய கருவிகளோடு கூடிநின்று அறியும் அறிவு. ஒன்றைச் சுட்டியறியும் சுட்டுணர்வு எனப்படும். இங்ஙனம் சுட்டுனர் வில்ை அறியப்படும் பொருள்கள் அனைத்தும் அழியுந் தன்மையனவாம். ஆதலின் அவை அசத்து எனப்படுவன. ஐம்புலத் தொடக்கினின்றும் நீங்கிச் சுட்டிறந்து அறியும் அறிவு மெய்யுணர்வு எனப்படும். மெய்யுணர்வினுல் அறியப் படுவதொன்றே சத்து எனப்படும் முழுமுதற் பொருளாகும்.