பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 131

பெறும் என்பதும், அத்துய்மைதானும் இறைவனது திருவருளாலேயே உயிர்கள் பெறத்தக்கதென்பதும்,

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீ (4-23-9).

எனவரும் நாவுக்கரசர் வாய்மொழியாற் புலனும்.

அறிவிலாத எனப்புகுந்து ஆண்டுகொண்டு அறி வதை யருளி, மேல்நெறியெல்லாம் புலமாக்கிய எந்தை எனவும், நம் களவறுத்து நின்ருண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும். பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலே ' எனவும் வரும் தொடர்கள், ஆன்மா சிவனருளால் தூய்மை பெறுதலைச் சுட்டி நிற்பன ፴፱፻፹፫ û.

இருகையானையை எனத்தொடங்கும் ஐந்தாம் பதிகம், கைம்மாறு கொடுத்தல் என்னுந் தலைப்புடையதாகும். தன்னைச் சிவனிடத்திலே கொடுத்தல் என்பது இதன் பொருள். தன்னை முன்னம் நினைக்கத் தந்துதவிய இறை வனுக்கு ஆன்மா, தன் ஆற்றலற்ற நிலையினை யுனர்ந்து தன்னையே கைம்மாருகக் கொடுத்து, இறைவன் அருள் வழி அடங்கி யொழுகும் நன்றியுணர்வினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது இப்பதிகமாதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் பெயர்த்தாயிற்று. இறைவன் தமக்குப் புரிந்த பேரருளுக்குக் கைம்மாருகத் தாம் ஒன்றும் செய்ய இயலாத எளிமை நிலையினை நினைந்திரங்கிய அடிகள், தம்மையே கைம்மாருக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிப் போற்றுகின்ருர். .*

என்னுளக்கருவை எனவும், தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றிய்ை எனவும், யாவரும் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வன், முந்தி என்னுள் புகுந்தனன் . எனவும், எட்டிளுேடு இரண்டும் அறியேனயே பட்டி மண்டபம் ஏற்றினை எனவும் இறைவனது கைம்மாறு வேண்டாக் கருணைத்திறத்தை நினைந்துருகிய வாதவூரடி கள், முட்டையினை விட்டு வெளியேறும் பறவைக்குஞ்சினைப் போன்று தம் யாக்கைத் தொடர்பினை உதறிவிட்டு ളങ്ങ வனையே தஞ்சமெனப் பற்றியுய்யும் கருத்துடைய என்பது,