பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பன்னிரு திருமுறை வரலாறு


காணலாம் பரமே கட்கு இறந்ததொர் வாணிலாப் பொருளே இங்கொர் பார்ப்பெனப் பாணனேன் படிற்ருக்கையை விட்டுனைப் பூணுமாறறியேன் புலன் போற்றியே.

எனவரும் திருப்பாடலாற் புலளும். யாக்கையைத் துறந்து நின்கழலைப் பற்றிக்கொள்ளும் ஆற்றலில்லாத எளியேன நின் அன்பர் கூட்டத்திற் கூவிப் பணிகொள்ளுதல் வேண்டும் என்பார், கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப் பணி ' என இறைவனை வேண்டுகின்ருர்.

ஈசனே யென்னெம்மானே எனத்தொடங்கும் ஆரும் பதிகம், அதுபோகசுத்தி என்னுந் தலைப்புடையதாகும். தன் வாழ்க்கை அநுபவங்களில் நேர்ந்த தவறுகளே யெண்ணி உள்ளங்கசிந்து இறைவனைப் போற்று முகத்தால் உயிர்தன் அநுபவங்களைத் தூய்மை செய்து கொள்ளுமாறு உணர்த்து வது இப்பதிகமாதலின் அதுபோக சுத்தியென்னும் பெயர்த் தாயிற்று. அநுபவம் தூய்மையடையவே அதனுல் உயிர்க்கு இன்பம் மேலிடுதல் இயல்பாதலின் இதற்குச் சுகமேலீடு ' எனப் பின்னுள்ளோர் கருத்துரைப்பர்.

நான் யாது மொன்றல்லாப் பொல்லா நாயான நீசனேனே ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன்

எனவும்,

செய்வதறியாச் சிறு நாயேன் செம்பொற்பாத மலர்காணுப் பொய்யர் பெறும் பேறத்தனை யும் பெறுதற் குரியேள் பொய்யில: மெய்யர் வெறியார் மலர்ப்பாதஞ் சேரக்கண்டும் கேட்டிருந்தும் பொய்யனேன் நான் உண்டுடுத்திங்கிருப்பதானேன் போரே தே

1. வாழ்நன் என்ற சொல் வாணன் எனத்திரிந்து தின் ருத் போன்று, பாழ்நன் என்பது பாணன் எனத்திரிந்து நின்றது. பாணனேன் என் புழி ஏன் தன்மையொருமை விகுதி. பாழ்நன் . வெறுவியன்.

2. (நின்னையறிந்து பற்றிக்) கொள்ளும் ஆற்றலற்ற என்ன நின்னுடைய அன்பர் கூட்டத்திற் கூவியழைத்துப் பனிகொள்வா யாக என்பது இத்தொடரின் பொருளாகும். இதற்கு இதுவே பொருளென்பது கேட்கவுங் கில்லேனே (திருவாசகம் 33; என அடிகள் பிருண்டுங் கூறுதலாற் புலளும், கொள்ளுங்கில்லேனே என்பது, கொள்ளுங்கில்லெனை எனக் குறுகி நின்றது.