பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பன்னிரு திருமுறை வரலாறு


பேரருளின் திறம் வெல்கவெல்க (சயசய) எனப் போற்றிப் பரவும் முறையீடாக அமைந்த இப்பதிகத்திற்குச் சிவ னுடைய வெற்றிப் பாட்டிரங்கல் எனக் கருத்துரைப்பர் பின்னுள்ளோர்.

‘புணர்ப்பதொக்க என்னும் முதற்குறிப்புடைய எட்டாந் திருப்பதிகம், ஆனந்தத் தழுந்தல் என்னுந் தலைப்புடைய தாகும். இங்கு ஆனந்தம் என்றது, பொறிகளின் வாயிலாக உயிர்கள் நுகரும் உலக வாழ்வாகிய சிற்றின்பத்தையன்றி, மெய்யுணர்வின் வாயிலாக நுகரத்தக்க சிவானந்தமாகிய பேரின் பத்தினையேயாம். இதன் இயல்பினைப் பேரானந்தம்' எனவும் உலப்பிலா ஆனந்தத்தேன் எனவும் அந்த மொன்றில்லா ஆனந்தம் எனவும் அடிகள் விளக்கியுள்ளார். அழுந்தல் என்றது, தான் என்னும் உணர்வு அற அப் பேரின் பத்திற் படிதலே. திருவுடைய சிந்தையராகிய திருவாதவூரடிகள், தம்மை ஆண்டு கொண்டருளிய இறைவனை நோக்கி, "எம் பெருமானே, என்னை நின்னெடு பிரிவறக் கூட்டிக்கொள்வாய் போன்று என்னை அடிமை கொண்டு யான் நின்னையே தஞ்சமெனக்கொண்டு தொண்டு பூணும்வண்ணம் அருட்கண்ணுல் நோக்கியருளிளுய், என்னை நின்னுடன் இரண்டற இயைத்துக்கொள்ளுதற்கு இதுகால

- - o . 窍 * so * * وم * மன்று எனக்கருதி நீ அதனைச் செய்யாது காலந்தாழ்த்தனை யாயின், ஆண்டாளுகிய நினக்கும் நின்னல் ஆட்கொள்ளப் பெற்ற அடிமையாகிய எனக்கும் உள்ள பண்டைத் தொடர்பு என்னுவது? அழகிய அருளாளனுகிய தலைவனே நீ என்னை நின்னுடன் கூட்டிக்கொள்க : அல்லது கூட்டிக் கொள்ளாது தவிர்க (அதுபற்றி எனக்குக் கவலையில்லை). நின் திருவடிக்கண்ணே எனது அன்பு பொருந்தும்படி செய்வாயாக. அத்தகைய பேரன்பே மேலான சிவயோகத்தை அடியேற்கு அளிப்பதாகுக' எனப் போற்றும் நிலையில் அமைந்தது,

புனர்ப்ப தொக்க எந்தை யென்னை யாண்டுபூண நோக்கிளுய் புணர்ப்பதன்றி தென்றபோது தின் ஞெடென் ஞெ டென்னிதாம் புணர்ப்பதாக அன்றிதாக அன்பு நின் கழற்கனே புணர்ப்பதாக அங்கணுள புங்கமான போகமே.

எனவரும் திருப்பாட்டாகும். இறைவன் திருவடிக்கண் செலுத்தும் அன்பொன்றே இந்திரன் முதலியோர் பதவிகளை எல்லாம் கீழ்ப்படுத்து எல்லா இன்பங்களுக்கும் மேலதாகிய