பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ; ;

|

திருவாசகம் 13;

பேராவியற்கையாகிய பேரின்ப நிலையை நல்க வல்லது என்பதனை, ,"

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும் ஏகநின் கழலினையலா திலேன் என் எம்பிரான் எனவரும் தொடரில் அடிகள் தெளிவாகக் குறித்துள்ளார்.

விச்சுக்கேடு எனத்தொடங்கும் ஒன்பதாம் பதிகம், 'ஆனந்த பரவசம் என்னும் தலைப்புடையதாகும். மேற் பதிகத்திற் குறித்தவண்ணம் சிவானந்தமாகிய பேரின் பத் தில் தலைப்படக் கிடைத்த நல்லுயிர் மேன்மேலும் உலப்பிலா ஆனந்தமாகிய அதன்கண் ஈடுபட்டுத் தன்வசம் அழிதல் ஆனந்த பரவசம் ஆகும். பரவசம் என்பதற்குப் பிறர்வயப் படல் என்பது பொருள். ஆயினும் ஈண்டு அச்சொல் தன் வசம் அழிதல் என்ற கருத்தில் ஆளப்பெற்றுளது. உயிர், கருவிகரணங்களின் சார்பு உண்மைபற்ருது சிவானந்தத்தில் தன்வசமழிந்து தோய்தலைக் குறித்தது இத்திருப்பதிக மாகும்.

திருவாரூரிற் கோயில்கொண்டருளிய பிச்சைத்தேவ கிைய பெருமானே! இவ்வுலகிற் பொய்யாகிய பயிர்க்கு விதையில்லாமற்போதல் கூடாது என்னும் கருத்துடன் பொய்க்குரிய விதையாக என்னை இங்கே சேமித்துவைத்துள் ளாய். நின்பால் ஆராவிருப்புடைய மெய்யடியாரெல்லாரும் நின் திருவடியையடைந்து இன்புறுகின் ருர்கள். யானே நின் அருள் வெள்ளத்தில் ஆகப்பட்டும் அதனை நுகர்ந்தின் புறும் உணர்வின்றி எனது அறியாமையாலுளதாகிய அச்சங் காரணமாகத் துன்பத்துள் ஆழ்ந்துபோகின்றேன். ஆற்ற லற்ற யான் வேறு என் செய்யவல்லேன் நின் அருளாரின் பத்தை நுகர்தற்குரிய உபாயத்தை எளியேற்கு உரைத்தருள் வாயாக’ எனத் திருவாதவூரடிகள் இறைவனை நோக்கி வேண்டுவதாக அமைந்தது, -

விச்சுக்கேடு பொய்க்காகா தென்றிங் கென வைத்தாய் இச்சைக்கான ரெல்லாரும் வந்துன் ருள் சேர்ந்தார் அச்சத்தாலே யாழ்ந்திடு கின்றேன் ஆரூரெம் பிச்சைத் தேவா என்னுன் செய்கேன் பேசாயே.

1. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே

என்னுடையன்பே என்பர் பின்னும். 2. திருவாசகம், திருச்சதகம், கதிர்மணி விளக்கம், பக்கம்