பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

பன்னிரு திருமுறை வரலாறு


லெழுப்பிக் கொண்டு சென்று பொய்கையில் ரோடி அண்ணு மலையான அன்பினுற் பாடிப் போற்றி மார்கழி நீராடலாகிய நோன்பினைச் சிறப்புறக் கொண்டாடினர் எனவும், அவ்வழ கிய காட்சியைக் கண்ட மணிவாசகப் பெருமான், அம்மகளிர் வைகறைப் பொழுதில் ஒருவரை யொருவர் எழுப்பிச் சென்று ஆர்த்த பிறவித்துயர் கெடப் பூத்திகழும் பொய்கை யில் நீராடி இறைவனை யேத்தி வழிபடும் நிலையில் அம்மக ளிர் கூறும் உரைகளாக இத் திருவெம்பாவையைப் பாடி யருளினுரெனவும் கடவுள் மாமுனிவர் கூறுவர்."

திருவெம்பாவை இருபது பாடல்களை உடையது. இப்பாடல்கள் யாவும் மகளிர் ஒருவரை யொருவர் நோக்கி எம்பாவாய் என அழைத்துக் கூறும் முறையில் பாவைமார் ஆரிக்கும் பாடலாக அமைந்திருத்தலால் திருவெம்பாவை யென்பது இதற்குரிய பெயராயிற்று. பாவை என்னும் ஐகார வீற்றுப்பெயர், ஐ ஆயாகும் (தொல்-விளிமரபு. 4) என்னும் விதிப்படி பாவாய் ' என விளியேற்றது. மகளிர் ஒருவரை யொருவர் துயலுணர்த்தி அழைத்து நீராடி இறைவனைப் போற்றும் முறையில் அமைந்த இப்பனுவலைப் பாவைப் பாட்டு என வழங்குவர் பேராசிரியர். " தரவின்ருகித் தாழிசை பெற்றும் ” (தொல்செய்யுளியல் 149) எனவரும் சூத்திரவுரையில் " பாவைப் பாட்டும் அம்மனைப் பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவனவாயின." எனப் பேராசிரியர் குறித்துள் ளமை திருவாசகத்திலுள்ள திருவெம்பாவை, திருவம் மானை ஆகிய வைப்பு முறையினை யொட்டி அமைந்திருத்தல் காணலாம். பெரும்பற்றப்புலியூர் நம்பியும் திருந்து பூவல்லி யுந்தி தோளுேக்கம் சிறந்த பாவை என இத்திருவெம்பா வையைப் பாவை' என்ற பெயராலேயே குறித்துள்ளார். திருமாலடியாராகிய ஆண்டாள் அருளிய பனுவல் திருப் பாவை என வழங்கப்பெறுதல் இப்பழைய வழக்கினை நினைவுபடுத்துவதாகும்.

இளமகளிர் இசையுடன் பாடியாடும் பல்வரிக் கூத்தாக அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார வுரையிற் காட்டியவற் றுள், அம்மனை, நல்லார்தந் தோள் வீச்சு (தோளுேக்கம்),

  • திருவாதவூரடிகள் புராணம், திருவம்பலச்சருக்கம், செய் দুী ৪83 -385, ,