பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பன்னிரு திருமுறை வரலாறு


தில் வையை யாற்றின் கரையிலே நிகழ்ந்த அம்பா ஆடல் நிகழ்ச்சியை ஆசிரியர் நல்லந்துவளுர் பதினுெராம் பரிபாட லில் ெ லோவியமாகப் புனைந்துரைத்துள்ளார்.

á á ாலை பிடித்த இளைய புலவரது விளையாட்டிற்கு மாருயெழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டைச் செய் கின்ற ஆயத்தினராகிய கன்னிமகளிர் நீர்க்கண் தம்புலன்கள் அடக்கிச்செய்யுந் தவத்தை முன்னைப் பிறப்புக்களில் அடுத் தடுத்துச் செய்ததன் பயன்தானே தம் தாயின் அருகே நின்று தவமாகிய தைந்நீராடலை நின்கட் செய்யப்பெற்றனர்? வையையே கூறுவாயகக ' என வையையை நோக்கி வினவு வதாக அமைந்தது,

மையாட லாடல் மழபுலவர் மாறெழுந்து

பொய்யாட லாடும் புனர் ப்பி னவரவர்

தீயெரிப் பாலுஞ் செறி தவமுன் பற்றியோ

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்

நீ யுரைத்தி வையை நதி (பரிபாடல் 11, 88 - 92) என்பதாகும். இங்கெடுத்துக் காட்டிய பதினெராம் பரிபாடல், மார்கழி மாதத்துத் திருவாதிரையை யொட்டி நிகழும் மகளிர் நோன்பாகிய தைந் நீராடலின் சிறப்பினை விரித்துரைப்பதாகும். இப்பாடலில் குளம்' என்றது மார்கழி மாதத்தை. திருவாதிரை நிறைமதி நாளாங்கால் ஆதித்தன் (ஞாயிறு) பூத்தடத்தின்கண் (புனர் பூசத்தில்) நிற்கு மாதலின், அதனையுடைய மார்கழி மாதம் குளமெனப்பட் டது ' என்பர் பரிமேலழகர். மார்கழித் திருவாதிரையில் இதைத்திங்களில் நிறைவுபெறும் மகளிர் நோன் சிங்க காலத்தில் தைந் நீராடல் எனவும், பிற்காலத் தில் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெற்றுள்ளது. இதனை மணிவாசகப் பெருமானும் திருமாலடியாராகிய நாச்சியாரும் மார்கழி நீராடல் என்றே வழங்கியுள்ளார்கள். நீராடலாகிய இந் நோன்பின் நிறைவு தைத்திங்களில் முற்றுப் பெறுதல் கருதித் தைந் நீராடல் எனச் சங்கப் புல வர்களும், நோன்பின் தொடக்கம் மார்கழியில் நிகழ்தல்பற்றி மார்கழி நீராடல் எனப் பின் வந்த பெருமக்களும் குறிப்பிட் டுள்ளார்கள். எனவே சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பட்டுள்ள தைந் நீராடலும், திருவெம்பாவையிலும் திருப் பாவையிலும் குறிக்கப்பெற்ற மார்கழி நீராடலும் ஒரு நோன்பினையே குறித்து வழங்கும் இரு வேறு பெயர்கள்