பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் క్షీణ్

என்பது பதினெராம் பரிபாடலால் இனிது புலளுதல் காணலாம்.

சிவபெருமானுக்குரிய திருவாதிரைத் திருநாளையே முதன்மையாகக் கொண்டு இந் நீராடல் நோன்பு நிகழும் எனபது,

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் னுளால்

நீராடப் போதுவீர் போதுமினே நேரிழையீர் எனவரும் திருப்பாவையால் உய்த்துணரப்படும். கன்னியர் பலரும் கோலம் புனைந்து ஒருங்கு கூடிச் சென்று நீராடு தலும், பிறர் வீடுகளிற் பாடிச் சென்று ஐயமேற்றுத் தாம் பெற்ற பரிசிற் பொருள்களை வறியோர் பலர்க்கும் வழங்கி மகிழ்தலும், பாவையைச் சிறிய குழமகளுகப் பேணிச் சீராட்டி அப்பிள்ளைக்கு மற்ருெருத்தியின் பாவையை மண மகளாக்கிக் கோடற்குச் சிறு சோறு சமைத்து இளமகளிர் குழுவுடன் விருந்துண்டு மகிழ்தலும் சங்க காலத்தில் நிகழ்ந்த தைந் நீராடலிற் காணப்படும் சடங்குகளாகும். இவற்றுட் சில தைப்பொங்கலை யடுத்துக் கன்னிப் பொங்கல் நாளில் தமிழ் நாட்டிற் சில விடங்களில் இள மகளிரால் மேற்கொள்ளப்பெற்று வருதலை இக்காலத்துங் காணலாம். தைந் நீராடலாகிய இந்நோன்பின்கண் கன்னிப் பெண்கள் அழகிய பாவையினை அமைத்துச் செய்யும் சடங்குண்மை கருதி இந்நோன்பு அம்பாவாடல் எனப் பெயரெய்தி யிருத்தல் வேண்டும். அம்பா - தாய். தாயோடு ஆடப் பெறுதலின் இப்பெயர்த்தாயிற்று என்ருர் பரிமேலழகர்.

' வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

செய்யுங் கிரிசைகள் கேளிரோ ” எனவும்,

" நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினுல் ’’ எனவும்,

  • பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் ” எனவும் வரும் திருப்பாவைத் தொடர்களால் இந்நோன்பில்

பாவைக்குச் செய்யும் சடங்குண்மை புலம்ை.

இங்ங்ணம் கன்னியர் நீராடி நோன்பு நோற்றலின் நோக்கம், நாடுமலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கி இவ்வுலகம் இன்புறுதல் வேண்டும் என இறைவனை

10