பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

பன்னிரு திருமுறை வரலாறு


வேண்டி அவனது திருவருளைப் பெறுதற் பொருட்டேயாம். தமிழ் நாட்டுச் சிறுமியர்களின் இவ்வுயர்ந்த அருள் நோக் கத்தினை,

  • வெம்பாதாக வியனில வரைப்பென

அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர் எனவரும் தொடரில் ஆசிரியர் நல்லந்துவளுர் அழகுற விரித் துரைத்துள்ளார். உலகில் அறம் பொருள் இன்பங்களாகிய ஒழுகலாறுகள் தடையின்றி நிகழ்தற்கு உறுதுணையாவது மழை. மழையின்றேல் மாநில வாழ்க்கையில்லை. இறைவ னது அருளின் நீர்மையாகிய மழையினைப் பெய்விக்கும் ஆற்றல் பெறுதற்குரியார் ஒருமை மகளிரே. ஆதலால் உலகம் மழையாற் குளிர்வதாக என உலகநலங் கருதி நோன்பியற்றும் கடமையும் உரிமையும் அம்மகளிர்க்கே யுரிய வாயின. ஒருமை மகளிர்க்குரிய இக்கடமை யுணர்வினை மணிவாசகப் பெருமான்,

முன்னிக்கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை யாளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும் முன்னி யவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய், எனவரும் திருவெம்பாவைச் செய்யுளால் எழில் பெற விளக்கியுள்ளார். இவ்வாறே ஆண்டாள் அருளிய திருப் பாவையிலும்,

ஓங்கி யுலகளந்த யுத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பா வைக்குச் சாற்றி நீ சாடினல் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ.ரெம்பாவாய்." ললা 貂 ఆఖ5ు மழையாற் பல வளமும் பெறுக என வாழ்த் துங் குறிப்புப் புலளுதல் காணலாம்.

சங்க நூல்களில் பாவையினை வைத்துச் செய்யும் சடங்கு முதலியன தைந் நீராடல் நோன்பிற்குரியவாகச்