பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் ፬47

சொல்லப்பட்டன. மகளிர்க்குரியனவாகச் சொல்லப்பட்ட அச்சிறிய சடங்குகளை விரித்துரையாமல், இருபாலாரும் இறைவனது திருவருள் பெற்று உய்யும் நோக்குடன் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாகிய இறைவன் ஒருவனையே மனமொழி மெய்களால் இறைஞ்சிப் போற்றும் ஒருமைநிலை வளர இளமகளிர் விடியற் காலையிலேயே துயிலுணர்ந்தெழுந்து தம் தோழியர்களையும் எழுப்பிக் கொண்டு பொய்கையில் நீராடி இறைவனது பொருள்சேர் புகழை வாயாரப் பாடிப் போற்றும் முறையில் திருவாதவூரடிகள் இத்திருவெம்பாவையை அருளிச் செய் துள்ளார்.

இறைவனருளிய மெய்யுணர்வினுல் மனமாசு நீங்கப் பெற்ற செம்புலச் செல்வராகிய அடியார்கள், ஆணவ மல மாகிய பேரிருளில் அழுந்தியுறங்கும் உயிர்களே அவ் வுறக் கத்தை விட்டு எழுப்பிப் பிறவி வெப்பந்தனிய இறைவனது திருவருளாகிய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி யின்புற வருக’ என அழைக்கும் முறையில் அமைந்தது, இத்திருவெம் பாவை யெனக் கூறுவர் பெரியோர்.

மல விருளுற் றுறங்காமல் மன்னுபரிபாகர் அருள் செலமுழுக வருகவெனச் செப்பல் திருவெம்பாவை ? எனவரும் திருவாசக வுண்மையில் இக்கருத்து இனிது விளக்கப்பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும்.

வைகறையில் துயிலெழுந்து இறைவனது மெய்ப் புகழை நெஞ்ச நெக்குருக நினைந்து போற்றிவரும் இள மகளிர், தம் தோழியர்பால் வைத்த அன்பும் இறைவன் திரு வடிகளில் தாம் வைத்த பத்தித் திறமும் வளர ஒருவரை யொருவர் துயிலுணர்த்தும் முறையும், நகைச்சுவை பொருந்த உரையாடும் நிலையிலும் இறைவன்பாற் கொண்ட அன்பின் திறமே மேம்பட இனிமையாகப் பேசும் மொழித் திறமும், பொழுது புலர்வதன்முன் பூத்திகழும் பொய்கை குடைந்தாடி அண்ணுமலையான் அடிக்கமலஞ் சென் றிறைஞ்சி அம்முதல்வனைப் பண்ணுர் தமிழாற் பாடிப் போற் றும் பாங்கும், உலகம் வெயிலாலும் பணியாலும் வெம்பாது நலம் பெற வேண்டி உலகம் ஈன்ற அன்னையாகிய இறைவி யின் திருவருளே யென்ன மழையைப் பெய்யப் பணிக்கும் மனவளமும், இறைவன்பால் அன்புடையவரையே தாம் கணவராகப் பெறுதல் வேண்டும் எனத் தம் மண வாழ்க்கை