பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

பன்னிரு திருமுறை வரலாறு


குறித்து இறைவனை வேண்டிப் போற்றும் மனத்திட்பமும், மன்னுயிர்கள் உய்தற் பொருட்டு ஐந்தொழில் திருக்கூத்தி யற்றும் இறைவனது அருளியல்பினைப் போற்றி அம்மகளிர் தாம் மேற்கொண்ட மார்கழி நீராடல் நோன்பினை நிறைவு செய்து கொள்ளும் முறையும் திருவெம்பாவை யென்னும் இப்பனுவலிலே அன்பெனும் ஆறு கரையது புரள அடிக ளால் நன்கு அருளிச் செய்யப்பெற்றுள்ளன.

இதன்கண் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி எனவும், மாலறியா நான்முகனுங் காணு 1&ు எனவும், அண்ணுமலையான் எனவும் திருவண்ணுமலைப் பெருமான அடிகள் குறித்துப் போற்றுதலால், இத்திரு வெம்பாவை திருவண்ணுமலையில் அருளிச் செய்யப்பெற்ற தென்பது இனிது விளங்கும்.

அ. திருவம்மானை

அம்மானை என்பது, மகளிர் விளையாடல்களில் ஒன்று. அம்மனைக்காய் கொண்டு விளையாடும் இளமகளிர் தம்முள் உரையாடி மகிழும் முறையில் அமைந்த வரிப்பாடல்களே இலக்கியங்களில் அம்மானை என்ற பெயராற் சிறப்பித்து வழங்கப் பெற்றுள்ளன. மகளிர் அம்மனை ஆடுங்கால் இறைவனைப் பரவிய புகழ்ப் பாடல்களையும் அரசன் முதலிய தலைவரைப் பற்றிய புகழ்ப் பாடல்களையும் பாடி மகிழ்வர் என்பது.

அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார்

தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை

(சிலப் - வாழ்த்துக்காதை)

எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது விளங்கும். அம்மனை என்னும் விளையாட்டில் மகளிர் மூவர் உட னமர்ந்து விளையாடுவர். அம்மூவருள் ஒருத்தி பாட்டுடைத் தலைவன் புகழ்ச் செயலைக் குறித்து வின நிகழ்த்த, இரண்டா மவள் அவ்விவிைற்கு விடைகூற, மூன்ருமவள் அப்புகழ்ச் செயலைத் தொடர்ந்து கூறிப் பாராட்டும் முறையிலும், அம் மூவரும் ஒருங்கு சேர்ந்து பாட்டுடைத் தலைவன் புகழைப் பாடிப் போற்றும் முறையிலும் அம்மானைப் பாடல்கள் அமைதல் இயல்பு.

  • வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர் கோன்

ஓங்கரணங் காத்த உரவோன்யார் அம்மானை