பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ണ്ണ~.'

تمہ

ف

|్యగా"

திருவாசகம் 149

ஓங்கரணங்காத்த உரவோன் உயர்விசும்பில்

தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் காண் அம்மானை

சோழன் புகார் நகரம் பாடேலோர் அம்மானே : எனச் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் வரும் அம்மானை வரிப்பாடல்கள் வினவும் விடையுமாக அமைந்தவை. திரு வாசகத்தில் வரும் திருவம்மானைப் பாடல்கள் மகளிர் பலரும் ஒருங்கு சேர்ந்து பாடி மகிழும் நிலையில் அமைந்த வரிப் பாடல்களாகும். சிலப்பதிகாரத்திலுள்ள அம்மானைப் பாடல் கள் ஐந்தடிகளால் இயன்ற கொச்சக ஒருபோகாய் நாடா ளும் வேந்தனைப் பாட்டுடைத் தலைவளுகக் கொண்டு பாடப் பெற்றவை. திருவாசகத்திலுள்ள திருவம்மானைப் பாடல் கள் ஆறடிகளாலியன்ற கொச்சக ஒருபோகாய் எல்லா வுலகிற்கும் முதல்வனுகிய சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு பாடப்பெற்றனவாகும். இவ்வரிப் பாடல்களில் அம்மானை என ஐயீறு இயல்பாகவும் அம் மாளுய் என ஆயீருகத் திரிந்தும் வரும் விளிகள், அம்மனை

யாடும் மகளிர் தம்கையிற் கொண்ட அம்மனைக் காயினையும்

தம்முடன் விளையாடும் தோழியையும் முன்னிலையாக்கும் நிலையில் அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும்.

தென்னன் பெருந்துறையான் அந்தணய்ை வந்து ஆட் கொள்ளப்பெற்ற திருவாதவூரடிகள், இறைவனது அம் கருணை வார்கழலால் தம் உள்ளத்தே ஊற்றெடுத்துப் பெரு கிய பேரானந்தத்தில் திளைக்கும் நிலையில் இத்திருவம் மானையை அருளிச் செய்தமையால், இதற்கு ஆனந்தக் களிப்பு என முன்னேர் கருத்துரை கூறினர். அந்தணர் வடிவுடன் வந்து ஆண்டுகொண்டருளிய இறைவனது பெருங்கருணைத் திறத்தை நினைந்து அருளிச் செய்யப் பெற்றது. இத்திருவம்மானையென்பது,

  • நலமுறும் அந்தணன் வடிவாய் நாரணன் காண்பரிய பதம்

நிலமதில் வந்து ஆள்கருணை நினைந்தாடல் அம்மானை எனவரும் திருவாசகவுண்மையால் அறியப்படும்.

மாலும் அயனும் காணுதற்கரிய வள்ளல், திருப்பெருந் துறையிற் குருவாக எழுந்தருளிச் சிந்தனையையுருக்கிப் பணிகொண்ட திறத்தினையும், பந்தமெலாம் நீங்கப் பரிமே லழகளுக எழுந்தருளி அளவிலா ஆனந்தம் அருளிய பான்மையினையும், கற்போலும் நெஞ்சத்தையுங் கனியச் செய்து தன் கருணை வெள்ள்த்தில் ஆழ்த்தி வினைத்தொட!