பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

பன்னிரு திருமுறை வரலாறு


அறுத்த மேன்மையினையும், பெருந்துறையிற் குருவாய் வந்த பெரியோன் காட்டாதனவெல்லாங் காட்டிச் சிவம் காட்டித் தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன்காட்டி யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்த பேரருளின் பெற்றியையும், எவ்வுயிர்க்கும் தாயாகிய தலைவன் நாயான நம்மையெலாம் ஆண்டருள்புரியும் அருளின் திறத்தையும், கண்ணுதற்கடவுளாகிய அம்முதல்வன் வந்தியென்னும் செம் மனச் செல்வியார்க்கு அருள்புரிதல் வேண்டி மதுரையிற் கூலியாளாக வந்து வையைப் பெருவெள்ளத்தையடைத்தற் பொருட்டு மண்சுமந்தும் வந்தியம்மையார் தந்த பிட்டமு தினைக் கூலியாகக்கொண்டு நுகர்ந்து மகிழ்ந்தும்,பாண்டியன் தன் கைப்பிரம்பினுல் அடித்த அடியினைத் தமது பொன்மேனி யிற் சுமந்தும் விளையாடிய எளிமைத் திறத்தையும், அண்ணு மலை யண்ணல் பெருந்துறையிற் கண்ணுர் கழல்காட்டித் தம்மையாண்ட தகவினையும் திருவம்மானையாகிய இப்பனு வலில் அடிகள் நெஞ்சநெக்குருகிப் பரவிப்போற்றியுள்ளார்.

தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினு ளுகிய இறைவன், அப்பாண்டி நாட்டைச் சிவலோகமாக்கிய பரிசும், இனிப்பிறவாமே காத்துத் தமக்கு வீட்டின்பம் நல்கிய தகவும், மெய்யர் மெய்யனுகிய இறைவன் ஐயாற்றில் அமர்ந் தருளிய வண்ணமும், அம்முதல்வனது திருவடிச்சிறப்பும், தன்னமதியாது தக்கன் செய்த வேள்வியில் கலந்துகொண்ட இந்திரன், எச்சன், கதிரோன் முதலிய தேவர்களைத் தண்டித் துத் திசை திசையே ஒட்டிய வெற்றிப்பாடும், ஆளு அறிவாய் விளங்கும் அப்பெரியோன் அளவிறந்த பல்லுயிர்க்குங் கோளுகி நின்ற குறிப்பும், அத்திருவருட் குறிப்பினை யுன்னி அடிகள் பெற்ற இன்ப அநுபவமும், என்னனே என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதாம் இறைவன் மன்னுயிர்களின் உள்ளத்துள்ளே ஒளியுருவாய்த் தோன்றி இன்னருள் சுரக் கும் இனிமைத் திறமும், மதுரையிற் குதிரைச் சேவகளுக எழுந்தருளிக் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட் டிய பெற்றியும் இத்திருவம்மானையில் விரித்துரைத்துப் போற்றப் பெற்றுள்ளன.

இதன்கண், ஐந்தாம் பாடலில் வரும் ஒல்லை விடை யான்' என்ற தொடர்க்கு, அடியாரை யிரட்சிக்கும் பொருட்டு விரைவாய்ச் சேறலுடைய புண்ணிய விடையை யுடையவன்' எனப் பொருள் கூறுவர் சீகாழித் தாண்டவராயர்.