பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 151

" கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் தேறிய காள கண்டன்

- (2–79–1) எனவரும் ஆளுடைய பிள்ளையார் வாய்மொழி இங்கு ஒப்பு நோக்கி உணரத்தக்கதாகும். இவ்வாறே 18-ஆம் பாடலில் வரும் வெளிவந்த மாலயனுங்காண்பரிய வித்தகனை என்ற தொடர்க்கு, "உள்ளிருப்பதை வெளியிலே தேடியவராதலின்' வெளிவந்த மாலயன் என்ருர்" என நயவுரைபகர்வர் தாண்டவராயர்.

" தேடிக்கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும்

தேடித்தேடொளுத் தேவனேயென்னுள்ளே - தேடிக்கண்டு

- கொண்டேன் ” (4-9-11) எனவரும் அப்பர் அருண்மொழி இங்குச் சிந்தித்துணர்தற் குரியதாகும்.

கேட்டாயோதோழி" எனத் தொடங்கும் ஆரும் பாடலில் உயிர்கள் மும்மலங்களும் நீங்க இறைவன் திருவடி யாகிய திருவருளிற் பிரிவறக்கலத்தலே வீடுபேறென்னும் மெய்ம்மையினை அடிகள் குறிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.

  • சேவடி படருஞ் செம்ம லுள்ள மொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் - செலவு நீ நயந்தனை யாயின் ' எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடர்ப் பொருளை விளக்க வந்த நச்சிஞர்க்கினியர், “புலம்பிரிந்துறையும் அடி - மெய்ஞ்ஞானத்தான் அறிதலைக் கைவிட்டுத் தங்கும் அடி. திருவடியே வீடாயிருக்குமென்ருர்; அது, தென்னன் பெருந் துறையான், காட்டாதனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித், தாட்டாமரைகாட்டித் தன் கருணைத் தேன்காட்டி என்பதணு னும், பிறரும் திருவடியைக் கூறுமாற்ருனும் உணர்க” என இத்திருவம்மானைப் பாடலின் பொருள் நுட்பத்தினை விளக்கி புள்ளமை உணர்ந்து போற்றத்தக்கதாகும்.

கூ. திருப்பொற்சுண்ணம்

திருக்கோயில்களில் இறைவனது திருமெய்ப்பூச்சுக் குரிய பொன்னிறமான மணப்பொடியினை இடிக்கும்பொழுது இளமகளிர் பாடும் வரிப்பாடலாகத் திருவாதவூரடிகள் அரு னிய பனுவல் திருப்பொற்சுண்ணம் என்பதாகும். ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே ' எனப் பாடல்தோ பயின்று வருதலால் பொற்சுண்ணம் என்பது இப்பனுவலுக்