பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் | ఫ్ర

காரத்தில் வரும் வள்ளைப்பாட்டினையும், அடியார்க்குநல்லார் உரையில் மேற்கோளாகக் குறிக்கப்பட்ட அவலிடி என்னும் வரிப்பாடலையம் ஒத்த அமைப்புடையதாதல் உய்த்துணரத் தக்கதாகும். இதன்கண் பாடல்தோறும் ஆடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே எனவரும் தொடர் இறைவன் திருமஞ்சனம் ஆடுதற்பொருட்டுப் பொற்சுண்ணமாகிய மணப்பொடியை நாம் இடிப்போமாக என மகளிர் கூறும்

முறையில் அமைந்ததாகும்.

இறைவனது திருமஞ்சனத்திற்குரிய சுண்ணம்இடிக்குங் கால், அதற்குரிய இடத்தினை மெழுகித் துய்மை செய்து முத்துமாலே முதலியவற்ருல் அணிசெய்து முளைக்குடம் வைத்துத் தூப தீபம் முதலியன அமைத்துக் கவரி வீசிக் கொடியெடுத்துச் சிறப்புச் செய்தல் வேண்டுமென்பதும், சுண்னமிடிக்கும் கருவியாகிய உரலுக்குப் பட்டுச்சாத்தி உலக் கைக்குப் பொற்பூண் முதலியன அணிந்து நேசமுடைய அடியார்கள் நீடு வாழ்க என வாழ்த்தி இறைவனைப் பாடிச் சுண்னமிடித்தல் மரபு என்பதும், பொற்சுண்ணத்திற்குரிய மணப்பொருள்களில் மஞ்சள் சிறப்புடையதென்பதும் இப் பதிகப் பாடல்களில் விளக்கப் பெற்றுள்ளன. சுண்ண மிடிக்கக் குழுவிய மகளிர்களாக சத்தி, சோமி, பார்மகள், நா மகள், சித்தி, கெளரி, பார்ப்பதி, கங்கை என எண்மர் இப் பதிகப் பாடலிற் குறிக்கப் பெற்றுள்ளனர். இக்குறிப்பினைத் துணையாகக்கொண்டு அட்ட சிவ சத்தியும் திருவையா றகலாத செம்பொற் சோதியை வணங்குதல் என இப்பதிகத் திற்குக் கருத்துரைப்பர் சீகாழித் தாண்டவராயர்.

தில்லைவாணன் திருமஞ்சனம் ஆடுதற்குரிய அழகிய சுண்ணத்தினை அமைக்க வேண்டுமானுல், அதற்கு உலகமே உரலாகவும் மேருமலையே உலக்கையாகவும் மெய்ம்மை யாகிய உயர்ந்த குணமே மஞ்சளாகவும் கொண்டு திருப் பெருந்துறையிற் கோயில் கொண்டருளிய இறைவனுடைய திருவடியினைப் பாடிப் பாடிச் செம்பொனுலக்கையை வலக் கையிற் கொண்டு இடித்தல் வேண்டும் என்பதனை,

வையக மெல்லாம் உால தாக

மா மேரு வென்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி

மேதகு தென்னன் பெருந்துறையான்