பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம்

எனவரும் சிவஞான சித்தியார் (166) திரு விருத்தத்தில் அருணந்தி சிவாசாரியார் தெளிவாக விளக்கியுள்ளார். -

கனகமார் கவின் செய் மன்றில்

அனக நாடகற்கெம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள் சிதம்பரச் செய்யுட்கோவை.) எனவரும் குழர குருபர அடிகள் பாடலும் இங்கு ஒப்புநோக் கததககதாகும.

.ெ திருக்கோத்தும்பி

தும்பி என்பது ஒரு வகை வண்டு. தலைமையுடைய வண்டு கோத்தும்பி என வழங்கப்பெறும். நறுமலர்களிற் படிந்து தேனுண்டு மகிழ்ந்த தலைமை வாய்ந்த அரச வண்டு மகிழ்ச்சி மிகுதியால் தேனுள்ள மலரையே சுற்றிச் சுற்றிச் சுழன்று பறத்தலைப் போன்று, விளையாடும் பருவத்து இள மகளிர், மகிழ்ச்சி மிகுதியால் ஒருவர்க்கொருவர் கைகோத்துக் கொண்டு சுற்றி விளையாடும் விளயாட்டினைத் தும்பி பறத்தல் என்பர். இவ்விளையாட்டில் ஈடுபட்ட இளமகளிர், கோத்தும்பியை முன்னிலைப்படுத்தி, அம்பலவன் தேனுர் கமலமாகிய திருவடித் தாமரையிலேயே சென்று படிந்து அவனது திருப்புகழாகிய இசையினையே இடைவிடாது இசைக்கும் வண்ணம் வேண்டிப் பாடுமாறு அமைந்த பனுவலாதலின், இது 'திருக்கோத்தும்பி யென்னும் பெயர்த் தாயிற்று. திருவாதவூரடிகள் தமக்குக் கிடைத்த சிவயோ தத்தை வண்டாக உருவகப்படுத்திச் சித்த விகாரமாகிய மனக்கலக்கம் நீங்க அவ் வண்டினைத் தம் ஆருயிர் நாயக ளுகிய இறைவன்பால் தூதனுப்புவதாக அமைந்தது திருக்கோத்தும்பி யென்னும் இப்பனுவல் என்பர். இந் நுட்பம், உயர் போதமொரு வண்டாகச் சித்தவிகாரத் தூது செப்பிவிடல் கோத்தும்பி எனவரும் திருவாசக வுண்மையால் இனிது புலம்ை. இதற்குச் சிவளுேடைக்கி யம் எனக் கருத்துரை வரைந்தனர் முன்னேர். சிவனுடன் இடையருது நிற்றல் என்பது இத்தொடரின் பொருளாகும். 'சடசித் தெங்கனும் தாமே நிறைந்த சிவாதுபவ சுவாது பூதிகம் விளைந்த அடியார்கள்.அவ்விளக்கம் எனக்குங் கிடைத்தது, உனக்குங் கிடைத்தது என்று ஒருவர்க் கொருவர் மடிபிடித்துக் கொண்டு வண்டு சுழலுகிறது போலச் சுற்றும் விளையாட்டு " என இத் திருக்கோத்தும் பிக்கு விளக்கங் கூறுவர் சீகாழித் தாண்டவராயர்.