பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

பன்னிரு திருமுறை வரலாறு


இதன்கண் சிவபெருமான் திருவடியின் அருமை பெரு மைகளும், அப்பெருமான் ஆட எடுத்த அடிமலர் யான் எனது என்னும் செருக்குடையாரால் அறியப்படாத அருமையுடைத்தென்பதும், அத்திருவடி வழிபடும் அன்பர் களின் என்பினையுருக்கி ஆனந்தத் தேன்சொரியும் குனிப் புடையதென்பதும், கண்ணப்பனை யொத்த அன்புருவாகிய அடியார்களையுடைய பெருமான் அன்பென்பது ஒரு சிறிதும் இல்லாத தம்மையும் கருணையினல் ஆண்டுகொண்டான் என்பதும், மெய்த்தேவர் தேவகைத் திகழும் முதல்வன் சிவ பெருமான் ஒருவனே யென்பதும், அம்முதல்வனே தமது சித்த விகாரமாகிய கலக்கத்தை நீக்கித் தெளிந்த சிவஞானத் தைத் தமக்கு நல்கியருளினன் என்பதும், அவனைத் தியா னிக்கும் அடியார்கள் உள்ளத்தில் ஆராத பேரின்பம் ஊற் றெடுத்துப் பெருகும் என்பதும், இறைவன் ஒருவனுக இருந் தும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதும், அவனை வழிபடும் அடியார்களுக்கு மரணம் பிறப்பு என்பது பற்றிய அச்சத்தின் பயணுகிய மயக்கம் இல்லை யென்பதும் அம்முதல் வன் உலக உயிர்கள் அனைத்தையும் தாய்போல் தலையளிக் கும் பேரருளாளன் என்பதும், கற்போலும் நெஞ்சத்தையும் கசிந்துருகச் செய்து அருவாய் மறைபயில் அந்தணனுகி வந்து தம்மை ஆண்டுகொண்டருளினன் என்பதும், அப் பெருமானது திருவடி நினைப்பார் உள்ளத்தே தேனுந்து சேவடி என்பதும், பசுபோதக் கருவிகளால் உள்ளி உணரப் படாதவன் இறைவன் என்பதும், பொய்யாய செல்வத்தை மெய்யென நம்பி அதனுள் அழுந்திக்கிடந்த தம்மை அம்பல வகிைய ஐயன் குருவாக வந்து ஆட்கொண்டு மெய்யுணர்வு அருளினன் என்பதும், மாதொரு பாகளுகிய அவனது தொன்மைக்கோலம் உள்ளுவாருள்ளத்துப் பிறவி வெப் பத்தை மாற்றித் தண்ணிழலாய் நின்று அருள் சுரக்குந் தன்மையுடையதென்பதும், அம்மையப்பராகிய அவரு டைய திருவடிகள் தம் உள்ளத்துறு துயரத்தைப் போக்கி உய்வித்தன என்பதும், தீமேனியாகிய இறைவன் நாய்மேல் தவிசிட்டது போல் தம்மை நன்ருப் பொருட்படுத்தி இன்ப மும் சிறப்பும் நல்கியருளினன் என்பதும் ஆகிய உண்மை கள் திருக்கோத்தும்பியாகிய இப்பனுவலில் திருவாதவூரடி களால் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.