பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 157

கெ. திருத்தெள்ளேனம் தெள்ளேனம் என்பது சிறுமியர்க்குரிய விளையாடல் களில் ஒன்ருகும். சிறுமியர் முச்சில் என்னும் சிறிய முறத் தைக் கையிற் கொண்டு தானியங்களைத் தெள்ளிக் கொழித்து விளையாடும் நிலையில் இறைவனது புகழ்த்திறங் களைத் தெளிந்துணர்ந்து பாடிப் போற்றுவதாக அமைந்தது இப்பனுவலாதலின், இது திருத்தெள்ளேனம் என்னும் பெயர்த்தாயிற்று. சிறிய முறத்தால் தெள்ளிப் புடைத்த லாகிய இது தெள்ளத்தெறுதல் எனத் தாண்டவராயர் உரையிற் குறிக்கப்பெற்றுளது. தெள்ளுதல் என்பது, தானிய முதலியவற்றைக் கல்லும் மண்ணுமாகிய குற்றங் களைப் புடைத்தொதுக்கித் துயனவாகத் தனியே பிரித் தெடுத்தல். தெள்ளத் தெறுதல் என்னும் இச்சொல்லின் உண்மையுருவம் தெள்ளத்தேறுதல் என்பதாகும். இந் நுட்பம், தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர், உள்ளத்தேறல் எனவரும் அப்பர் அருள் மொழியாலும், தெள்ளி வடித்தறிந்த பொருள் சிவன் கழலிற் செறி வென்றே கொள்ளும் உணர்வினில் எனவரும் சேக்கிழார் வாய் மொழியாலும் இனிது புலனுதல் காணலாம். பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ எனவரும் சொற் குறிப்புக்கொண்டு தெள்ளேனம் எனக் குறிக்கப்படும் இவ் விளையாட்டு பாட்டுக்கேற்பக் கைகொட்டியோ பறை கொட் டியோ இயற்றப்பெறும் விளையாட்டாக இருக்கலாம் எனக் கருதுதலும் உண்டு.

இதற்குச் சிவளுேடடைவு என முன்னேர் கருத் துரைத்தனர். ஆன்மாவாகிய தாம் ஆன்ம நாயகனுகிய சிவனுடனே கூடி இன்புறுந் திறத்தை உலகத்தார் அறிய விரித்துரைக்கும் முறையில் திருவாதவூரடிகள் திருத்தெள் ளேனம் என்னும் இப்பனுவலை அருளிச் செய்துள்ளார். இந்நுட்பம், நாம் ஒழிந்து சிவமாயவா பாடித் தெள்ளே ணம் கொட்டாமோ ' எனவும் தேவானவா பாடி எனவும் வரும் அடிகளது அநுபவ மொழியாலும்,

  • பொன் ஞர் மெய்யண் ணலரும் போதவின் பமே மிகுந்து

தென்கு தென்னவென்று தெள்ளேனம் கொட்டியதாம் . எனவரும் திருவாசக வுண்மையாலும் இனிது புலனும்.

ஊரும் பேரும் உருவும் இல்லாத இறைவன் ஊரும் பேரும் கொண்டு யாவராலும் போற்றப்பெறும் முறைமை