பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

பன்னிரு திருமுறை வரலாறு


திருவடி ஞானம் பெற்றபின் சிவனை யன்றி மற்ருென்றையும் காளுமை, வாக்குமணங் கடந்த பரம்பொருள் உயிர்களின் மனத்துட் புகுந்து உருக்கிப் பணி கொள்ளுதல், அப்பரம் பொருளின் அருளால் உயிர் பசுத்துவம் நீங்கிச் சிவமாதல், அறிதற்கரிய பொருளாகிய சிவம் கருப்பிணி நீங்க உயிர் களின் உள்ளத்துள் அமர்தல், அம்மையப்பளுய் வந்து ஆட் கொண்டருளுதல், திருவடியைத் தரிசித்தவுடன் சீவன் சிவ ஞன முறைமை, இறைவன் தன் கழல் மறவா வண்ணம் நல்கிய திறம், கல்லில் நாருசித்தல் போன்று தன் பேராற்ற லால் உயிர்களின் கன்னெஞ்சத்தினையும் கனிவித்து ஆட் கொள்ளுதல், வாளுேர்க்குக் கனவிலும் அறியப்படாத அம் மெய்ப்பொருள் தமக்கு நனவிலேயே எளிவந்தருளினமை, தம் செயலற்று இறைவன் செயலிலேயே தம்முணர்வு அடங்கப் பெற்றமை, பத்திக்கடலுள் பதித்த பரஞ்சோதி தமக்குச் சிவானந்தம் விளைத்துத் தித்தித்திருக்கும் திறம், ஆன்ம போதத்தால் அறிய வொண்ணுத முழுமுதற் பொருள் திருவடி ஞானத்தால் நேர்பட்டருளுதல், து லுனர் வால் உணரப்படாத செம்பொருள் அன்புடைய மெய்யடி யார்கள் அநுபவிக்க வெளிப்படுதல், பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனத் திருவடி ஞானத்தாற் சிந்தையிற் கண்டு போற்றுதல், ஒவ்வாத சமயக் கோட்பாடு களிலும் சாத்திரங்களிலும் மயங்கித் தடுமாருது சிவபதம் பெறுதல், பசுபோதங்கெடுதல், காண்டற்கரிய கடவுளே அவ னருளாற் கண்ணுரக் கண்டு களித்தல், திருச்சிலம்போசை ஒலி வழியே சென்று நிருத்தனை நேர்பட்டு இறைஞ்சி மகிழ்தல் ஆகிய செய்திகள் இப்பனுவலில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

உெ. திருச்சாழல்

சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று. ஒருத்தி ஒரு கதையின் செயலைப்பற்றி விளு நிகழ்த்த, மற். ருெருத்தி அக்கதையின் இடமாகத் தோற்றிய முரண்பாட் டினை நீக்கி அதன் உட்பொருளை விளக்கி விடை கூற, இவ் வாறு மகளிர் இருவர் ஒரு கதைபற்றி வினவும் விடையும் நிகழ்த்தி உரையாடி விளையாடும் முறையில் அமைந்தது சாழல் என்னும் இவ்விளையாட்டாகும். நற் சாழல் எனப் பல்வரிக் கூத்துள் ஒன்ருகச் சிலப்பதிகார வுரையிற் குறிக்கப் படுவது இதுவேயாகும்.