பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 盘翰邻

திருவாதவூரடிகள் தில்லையில் புத்தரொடு நிகழ்த்திய வாதில், ஈழநாட்டு மன்னன் வேண்டுகோட்கிரங்கி, அவன் மகளாகிய ஊமைப் பெண்ணப் ப்ேசுவிக்கத் திருவுளங் கொண்டு, அவ்வூமைப் பெண்ணை நோக்கிச் சிவபெருமா னுடைய திருவருட் செயல்களின் உட்கருத்துப்பற்றி வினவி யருள, பிறவி யூமையான அப்பெண் அவ்விளுக்களுக்கெல் லாம் தக்கவாறு விடை கூறினுள் என்பதும், திருவாத வூரடிகள் தாம் கேட்ட வினுக்களையும் அவ்விளுக்களுக்கு அவ் ஆமைப்பெண் கூறிய விடைகளையும் தொகுத்துத் திருச் சாழல் என்னும் இப்பனுவலாக இயற்றியருளிளுரென்ப தும் வரலாறு. இப்பனுவல், எல்லாம் வல்ல சிவபெருமானது முழுமுதற் றன்மையினையும் அம்முதல்வன் உயிர்கள் மேல் வைத்த பெருங்கருணைத் திறத்தையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்ததாகும். இதற்குச் சிவனுடைய காரு ணியம் என முன்ஞேர் கருத்துரை வரைந்தனர். முன் ஞர் கலையுமுனரா மூகையாமேடி, தன்னுற் பதிமுதன்மை சாற்றியதாந் திருச்சாழல் என்பது திருவாசகவுண்மை. இப்பதிகம் கதையழித்துப் பொருள் சொன்னது எனத் தாண்டவராயர் குறித்துள்ளார். சிவ புராணங்களின் உள் எரீடு இதுவெனத் தெரிவிக்கும் முறையில் திருவாதவூரடிகள் திருச்சாழலாகிய இதனை அருளிச் செய்துள்ளாரென்பது தாண்டவராயர் குறிப்பினுல் இனிது புலனும்.

சிவபெருமான் திருநீறு பூசி அரவம் பூண்டு அருமறை களை அருளிச் செய்தமை, கோவன ஆடையுடுத்தமை, சுடு காடு கோயிலாகவும் புலித்தோல் உடையாகவும் கொண்டுள் ளமை, அயன், அநங்கன், அந்தகன், சந்திரன் முதலி யோரை ஒறுத்தமை, அயனும் மாலும் அடிமுடிகாணுவண் ணம் ஆரழலாய் நிமிர்ந்து தோன்றினமை, கங்கையைச் சடையிற் கரந்தமை, ஆலகால நஞ்சினை உண்டமை, மாதொருபாகன் ஆனமை, அடியடைந்தாரை ஆனந்த வெள்ளத்தில் திளைக்கச் செய்தமை, தசை யொழிந்த உட லின் முழு எலும்பாகிய கங்காளத்தினை அணிந்தமை, காடு பதியாகவும் தோல் உடையாகவும் பிச்சை உணவாகவும் கொண்டமை, மலையரையன் மகளை மணந்தமை, திருநட்டம் ஆடினமை, இடபம் உகந்து ஏறினமை, அம்பலத்தே கூத் தாடி அமுது செயப் பிச்சை யேற்றுத் திரிந்தமை, சலந் தரனைத் தடிந்த சக்கரத்தை நாரணனுக்கு அருளினமை