பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

பன்னிரு திருமுறை வரலாறு


ஆகிய திருவருட் செயல்களைப்பற்றிய விளக்கங்கள் இப்பனு வலில் இடம் பெற்றுள்ளன.

திருமுருகாற்றுப்படைக்கு உரை வரைந்த நச்சிஞர்க் கினியர், ஒரு முகம், குறவர் மடமகள் கொடிபோல் நுசுப் பின், மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே (திரு முருகு - 100-102) எனவரும் தொடர்க்கு உரை கூறு மிடத்து " ஒரு முகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய வல்லிபோலும் இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று , மடவரல் நகை எனக் கூட்டித் தனக்கு ஒரறியாமை தோன்றும் நகை யென்று கூறுக. அவளொடு நகை யமர்தலின் அறியாமை கூறிஞர் : காம நுகர்ச்சியில்லாத இறைவன் இங்ங்னம் நகையமர்ந்தான்; உலகில் இல்வாழ்க்கை நடத்தற்கென்றுணர்க. அது, * தென்பாலுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன் என்பத னுள், பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர், விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ என்பதனுன் உணர்க " என இத் திருச்சாழலின் ஒன்பதாம் திருப் பாடலை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளமை ஈண்டு நினைக்கத் தக்கதாகும்.

திருவெம்பாவை முதல் திருச்சாழல் ஈருகவுள்ள பனு: வல்கள் ஆறும் இருபது இருபது பாடல்களால் இயன் றுள்ளமையாலும் இளமகளிர் விளையாட்டாதல் ஒப்புமை

யானும்இம்முறையே இயைபு பெறஅமைந்துள்ளன.

பிங். திருப்பூவல்லி

திருப்பூவல்லி என்பது, அழகிய பூக்களையுடைய கொடி எனப் பொருள்படும். இச் சொல், பூக்கொய்தலாகிய இள மகளிர் விளையாட்டினையும் அவ் விளையாட்டிற் பாடப்பெறும் வரிப்பாடலையும் குறித்த பெயராக இங்கு ஆளப்பெற்றது. சிலப்பதிகார வுரையில் அடியார்க்குநல்லார் குறித்த பல்வரிக் கூத்தினுள் ஒன்ருகிய கொய்யு முள்ளிப்பூ என்பது இப் பூவல்லியாகிய விளையாட்டினைக் குறிக்குமெனக் கருது தல் பொருந்தும். இறைவனுக்குச் சாத்துதற்கென நறு மலர் கொய்யும் சிறுமியர்கள் அம் முதல்வனது பெருங் கருணைத் திறத்தை வியந்து பாடும் முறையில் திருவாத வூரடிகள் இத் திருப் பூவல்லியினை அருளிச் செய்துள்ளார்.