பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் jôì

இப்பதிகத்திற்கு மாயா விசயம் நீக்குதல் அஃதாவது மாயையின் பலத்தை மறுத்தல் என முன்ஞேர் கருத் துரைப்பர். வானேராலும் அறிய வொண்ளுத சிவபெரு மான், மாயையின் தொடர்ச்சியுட்பட்டு மதிமயங்கும் மனிதர் களாகிய நம்மனுேரை ஆட்கொள்ளுதல் வேண்டித் தன் பெருங்கருணையால் எளி வந்து மாயையின் வலியை நீக்கி ஆண்டுகொண்ட அருள் நலத்தினை அடியார் பலர்க்கும் ஆர்வமுடன் எடுத்துரைத்து அம்முதல்வனுக்குச் சாத்துதற் குரிய நறுமலர்களைக் கொய்வோமாக என அடியார் பலரை யும் ஒருங்கு அழைத்தல் இத் திருப் பூவல்லியின் பொரு ளமைதியாகும். இந் நுட்பம், தேவரறியாத சிவம் தேடியே யாண்ட நலம், ஆவலொடுஞ் சொல்லி அடியாரொடுங் கூடிப், பூவியந்து கொய்தல் திருப்பூவல்லியாம்' எனவரும் திரு

வாசக வுண்மையால் இனிது புலனும்.

இதன்கண் தேளுடு கொன்றைச் சடைக்கணிந்த சிவ பெருமான், ஊளுடி நாடி வந்துள் புகுந்தான் ' எனவும், இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணை யான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன் என வும், எந்தை யெந்தாய் சுற்ற மற்றுமெல்லாம் என்னு டைய பந்தமறுத் தென்னையாண்டு கொண்ட பாண்டிப் பிரான் எனவும், தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெரு மான், மாயப் பிறப்பறுத் தாண்டான் எனவும், பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி என் தலைமேல் வைத்தபிரான் ' எனவும் திருவாதவூரடிகள் குறிப்பிடுதலால், தேவராலும் அறிய வொண்ணுத இறை வன் தேடிவந்தாண்ட திறமும் மாயா விசயம் நீக்குதல் என்னும் பதிகக் கருத்தும் இனிது புலளுதல் காணலாம்.

எண்குணத்தாளுகிய இறைவனடிகளே வணங்குதற் கேற்ற தலைமை யமைந்த தலையும், அவனுடைய பொருள்சேர் புகழ்த்திறங்களை விரித்துரைத்தற்கேற்ற நாநலம் வாய்ந்த வாயும், இறைவன் திருவடிக்கேற்ற திருப்பணிகளை விருப் புடன் இணங்கிச் செய்தற்குரிய நேயமலிந்த அடியார் திருக் கூட்டமும் ஆகிய சாதனங்களைத் தந்தருளி, அருளுருவாகிய அம்மையுடன் கூடித் திருவம்பலத்திலே ஆடல் புரிந்தருளும் கூத்தப் பெருமானது திருவருட் குணத்தைப் பாடிப் பரவி, இறைவன் திருவடிகளில் அருச்சித்தற்குரிய நறுமலர்களைக்

11