பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் iá3

எழுந்தருளி, உபதேசஞ் செய்யும்போது, அன்புடைய இரா வணன் வர, சுவாமி பாலகளுகத் திருமேனி கொள்ள, பார்ப் பதி தாய் போலக் குழந்தையை யெடுத்துக் கொண்டு இடுப் பில் வைத்து அன்பால் இன் புற்று எழுந்தருளிய செயலைக் குறித்ததெனப் பொருள் கொள்வர் சீகாழித் தாண்டவ ராயர்.

திருப்பூவல்லி யென்னும் இப்பதிகமும் இதன் அடுத்த பதிகமாகிய திருவுந்தியாரும் பத்தொன்பது பத்தொன்பது திருப்பாடல்களையுடையனவாம். அச்சிட்ட பதிப்புக்கள் சில வற்றில் இவ்விரு பதிகங்களில் முறையே மாவார வேறி

ஏகாசமிட்ட என்னும் முதற் குறிப்புடைய பாடல்கள் இருபதாவது பாடல்களாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் இரண்டும் பழைய நல்ல பதிப்புக்களில் இடம் பெருமையாலும் திருவாசகத்துக்குக் கிடைத்துள்ள உரை களுள் மிகவும் பழைமையுடைய சீகாழித் தாண்டவராயர் உரையில், இவை இல்லாமையாலும் இவ்விரு பாடல்களும் பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பெற்ற மிககப் பாடல்கள் எனவே கருத வேண்டியுளது.

செ. திருவுந்தியார்

உந்தி பறத்தல் என்பது மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று. உந்தி பறத்தலாவது விளையாடும் பருவத்து இள மகளிர் பாட்டுடைத் தலைவனது வெற்றியை வாயாற் புகழ்ந்து கொண்டு உயர எழுந்து குதித்தலாகும். மகளிர் இருவர் சிவபெருமானுடைய வெற்றிச் செயல்களைச் சொல் லிக் கொண்டு துள்ளிக் குதித்து விளையாடும் முறையில் திரு வாதவூரடிகளால் அருளிச் செய்யப்பெற்ற பனுவல் இத்திரு வுந்தியாராகும். இதற்கு ஞானவெற்றி என முன்ஞேர் கருத்துரைத்தனர். அருட்சத்தியினுடைய சாமர்த்தியத் தைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது இப்பனுவலாகும். அரன் சீர் பாவமுறு தீமையறப் பாடல் திருவுந்தியதே என்பது திருவாசகவுண்மை.

இதன்கண், சிவபெருமான் திரிபுரம் எரித்தருளியது (1-4ஆம் பாடல்கள்), தக்கன் வேள்வி தகர்த்தது (5-16ஆம் பாடல்கள்) பாலகனுர்க்குப் பாற்கடல் ஈந்தது (17ஆம் பாடல்), நான்முகனது தலையைக் கிள்ளியது (18ஆம் பாடல்), இராவணனை மலையின் கீழ் அடர்த்தது (19ஆம் பாடல்)