பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பன்னிரு திருமுறை வரலாறு


(1) திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

மதுரைத் திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சோம சுந்தரக் கடவுள் தன்பால் மெய்யன்புடைய அடியார்கள் பொருட்டு நிகழ்த்தியருளிய அற்புத நிகழ்ச்சிகளாகிய திருவிளையாடல்கள் அறுபத்துநான்கினையும் விசித்துக் கூறுந் தமிழ் நூல்களுள் மிகவுந் தொன்மையுடையதாக விளங்குவது திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண மாகிய இதுவேயாகும். இது வடமொழியில் உத்தரமகா புராணத்திலுள்ள சாரசமுச்சயம் என்ற பகுதியிற் கூறப் பட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு இயற்றப்பட்டதென் பர். இதன்கண் விரித்துரைக்கப்பெறும் அறுபத்துதான்கு திருவிளையாடல்களுள் ஞானுேபதேசஞ் செய்த திருவிளே யாடல், நரிகுதிரையான திருவிளையாடல், குதிரை நரியான திருவிளையாடல், மண்சுமந்த திருவிளையாடல் ஆகிய நான்கும் அன்புடைத் தொண்டராகிய திருவாதவூரடிகள் பொருட்டு ஆலவாயிறைவரால் நிகழ்த்தப்பெற்ற அருட் செயல்களாகும். இறைவன் செய்தருளிய இத் திருவிளே யாடல்களை விளக்கும் நிலையில் திருவாதவூரடிகளது வரலாறு இப்புராணத்தில் இடம்பெற்றுளது.

செந்தமிழ்ப் பாண்டி நாட்டிலே பொய்யாவாய்மொழிக் கபிலர் என்னும் புலவர் பெருமான் பிறந்தருளின்தும் வாயு தேவனுல் வழிபடப்பெற்ற சிவபெருமான் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருப்பதும் ஆகிய திருவாதவூரிலே மானமங்கலத்தார் என அழைக்கப்பெறுந் தொன்மை, யமைந்த ஆமாத்தியர் குலத்திலே இறைவனருனாக சிவகணத்தலைவரொருவர் வந்து பிறந்தருளினர். அவர்க்கு வாதவூரர் என்றபெயர் இடப்பெற்றது. திருவாதவூரர் முன்னைப்பிறப்பின் தொடர்பால் அறிவுநூல்கள் எல்லா வற்றையும் பதினருண்டு நிரம்புதற்கு முன்னரே கசடறக் கற்றுணர்ந்தார். அந்நாளிற் பாண்டி நாட்டை யாண்ட வேந்தர் பெருமாளுகிய பாண்டியன், வாதவூரரது கல்வி யறிவாற்றலைக் கேள்வியுற்று அவரைத் தன்பால் வர வழைத்துத் தென்னவன் பிரமராயர்’ என்ற சிறப்புப் பெயருடன் பல வரிசைகளும் தந்து பாராட்டித் தன் அமைச்சர்களில் ஒருவராக அமர்த்திக்கொண்டான். அரச குற் சிறப்புப்பெற்ற திருவாதவூரர், அவனுடைய நால்வகைச் சேனைகளையும் நன்கு பாதுகாக்கவல்ல தலைமையமைச்சராய்ப்