பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 16?

சீரார் பவளங்கால் முத்தங் கயிருக ஏராரும் பொற்பலகை ஏறி யினிதமர்ந்து

எனவும்,

  • அன்னத்தின் மேலேறி யாடுமணி மயில்போல்

... ... ... ...பொன்னுரச லாடாமோ எனவும் வருதலால் பொன்னுரசலின் வனப்பும் வடிவ அமைப்பும் அவ்வூசலில் மகளிர் ஏறி அமர்ந்தாடும் அழகும் இனிது புலனுதல் காணலாம். -

.ெஎ. அன்னைப் பத்து

திருப்பெருந்துறையிற் குருவாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டருளிய இறைவன் மதுரை நகர வீதியிற் குதிரைச் சேவகனுக எழுந்தருளியபோது அவனது பேரழ கில் ஈடுபட்டு அவன்பாற் காதல் கொண்ட தலைவி யொருத்தி தன் அன்னையை தோக்கிக் கூறும் கூற்றினைக் கொண்டு கூறும் முறையில் திருவாதவூரடிகள் அருளிய பனுவல் அன்னைப்பத்தாகும். இச் செய்தி,

ஆங்கொரு சிறுமி தன் சீர் அன்னையை நோக்கிக்கூறும்

தாங்கிசை மொழியேயாகத் தகுமவை பீரை ந் தோதி

எனவரும் கடவுள் மாமுனிவர் வாய்மொழியால் இனி துணரப்படும். தலைவி யொருத்தி தன் அன்னையை நோக்கிக் கூறும் கூற்றினைக் கொண்டு கூறும் நிலையிலமைந்த பத்துத் திருப்பாடல்களேயுடைய பனுவலாதலின், இஃது அன்னைப் பத்து என்னும் பெயருடையதாயிற்று. இதன்கண் பாடல் தோறும் அன்னே யென்னும் ' என்ற தொடர் இருமுறை பயின்று வருதல் காணலாம். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையின் இரண்டாம் பத்தாக அமைந்த அன்னுய்ப் பத்து ' என்னும் பெயர்ப்பொருளமைதியினை இவ் அன்னைப்பத்து அடியொற்றி அமைந்திருத்தல் கூர்ந்து நோக்கத்தக்க தாகும். நேயமிகுந்த நிலை குலேயக் கூடுதலை, ஆயவருள் தாய்க்கங் கறைத லன்னைப் பத்தாகும் என்பது திருவாசக வுண்மை. அன்னைப் பத்தாகி இப்பனுவலுக்கு ஆத்தும பூரணம்’ என முன்னேர் கருத்துரைத்தனர். ஆத்தும பூரணமாவது ஆன்மா சிவனுடனே நிறைதல்' என்பதா இப்பனுவலில் அமைந்த பாடல்களில் இரண்டு மூன் அடிகள் இடை மடக்காய் அமைந்திருத்தல் காணலாம்.