பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

7

{}

பன்னிரு திருமுறை வரலாறு சிவபெருமானுக்குரிய சிறப்புடைய பத்து அங்கங்களுள், பேர் : ஆரூரன், எம்பெருமான், தேவர் பிரான். நாடு : தென்பாண்டி நாடு. ஊர் : உத்தரகோச மங்கையூர். ஆறு : ஆனந்தமாகிய ஆடு: மலை : இன்பமரும் முத்தியருளும் அருளாகிய மலை. ஊர்தி : வான் புரவி. படை கழுக்கடை. முரசு : நாதப்பறை. தார் : தாளியறுகு. கொடி ஏறு.

எனத் திருவாதவூரடிகள் இத்திருப்பதிகத்திற் குறித்துப் போற்றியுள்ளார். இறைவன் பெருந்துறையிற் குருவாகத் தோன்றித் தம்மை ஆண்டு கொண்டருளிய நிலையில் அவ னுக்குரிய பத்து அங்கங்களையும் விரித்துரைக்கு மிடத்து ஏற்றுக் கொடிக்கு இயையத் துய நீற்றுக் கோடியினையும் தாளியறுகின் தாருக்கு இயையக் கழுநீர் மாலையினையும் கீர்த்தித் திருவகவலில் அடிகள் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கி உணரத்தகுவதாகும்.

" ஆறும் மலையும் யானையும் குதிரையும்

நாடும் ஊரும் கொடியும் முரசும்

தாருந் தேரும் தசாங்கம் எனப்படும் ”

எனச்சேந்தன் திவாகரமுடையார் தசாங்கம் என்ற பிரபந்தத் திற்கு இலக்கணம் கூறியுள்ளார். இவற்றுள் தேரை நீக்கிப் படையைச் சேர்த்துரைப்பர் சூடாமணி நிகண்டுடை யார். திருவாதவூரடிகள் குறித்த பத்து அங்கங்களுள் பேர், படை என்பன திவாகரத்தில் இடம் பெறவில்லை. அவ்விரண் டின் இடத்தில் யானை குதிரை என்பன சேர்க்கப்பட்டன. திருவாசகத்திற் குறிக்கப்பட்ட பேர் என்னும் அங்கம் சூடா மணி நிகண்டிற் குறிக்கப் பெறவில்லை : யானை என்னும் அங்கம் இடம் பெற்றுளது.

“ வழக்கொடு சிவணிய வகைமையான "

(தொல்-புறத்தினே-31, எனவரும் புறத்திணையியற் சூத்திரவுரையில், சிவணிய வகைமை என்றதனுனே முற்கூறியவற்ருேடே நாடும் மலை