பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

பன்னிரு திருமுறை வரலாறு


காலத்துத் தொழுதுகொண்டு எழுதல் இன்றியமையாததாத லின், அவனருளாலே அவன்தாள் வணங்கித் துயிலெழும் வழிபாட்டு நெறிமுறையினை மாந்தர்க்கு அறிவுறுத்தும் நோக்கத்துடன் திருவாதவூரடிகளால் திருவாய் மலர்ந்து அருளப்பெற்றது 'திருப்பள்ளியெழுச்சி என்னும் இப்பனுவ லாகும். தூங்கி விழிக்கும் இயல்பினராகிய வேந்தர் முதலா யினுரை எழுப்புத் துயிலெடைநிலை என்னும் துறையினும் இது வேறுபட்டதென்பது புலகைச் சான்ருேர் இதனைத் துயிலெடைநிலை யென்னது திருப்பள்ளியெழுச்சியெனத் தொன்றுதொட்டு வழங்கி வருவாராயினர். இந்நுட்பம்,

" நீறணிந்தார் அகத்திருளும் நிறைகங்கு ற் புறத்திருளும்

மாறவருந் திருப்பள்ளி யெழுச்சி யினில் ”

(பெரிய-நாவுக்-68; என வரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியில் இனிது புலகு தல் காணலாம்.

திருவாசகத்திலமைந்த திருப்பள்ளியெழுச்சி என்னும் இத்திருப்பதிகத்திற்குத் திரோதானசுத்தி என முன்னேர் கருத்துரை வரைந்தனர். திரோதானசுத்தி என்னும் இத் தொடர்க்கு, ஏகமாகிய திரோதாயி மறைப்பான மலம் நீங்கு தல் எனப் பொருள் உரைப்பர்.

" ஏர்மருவு திருப்பள்ளி யெழுச்சி பணிவிடை கேட்டு

ஆர்வமுடன் ஆண்ட அாற்கு அன்பு செயும் இயல்பே ”

எனத் திருப்பெருந்துறைப் புராணமுடையார் இத்திருப் பதிகக் கருத்தினைத் தெளிவாகக் குறித்துள்ளார். திருப் பெருந்துறையில் இறைவல்ை ஆட்கொள்ளப் பெற்ற திருவாதவூரடிகள், வைகறைப்பொழுதில் துயிலெழுந்து திருப்பெருந்துறை இறைவனைப் போற்றி அடியார்களாகிய தமக்கு அருள்புரிய எழுந்தருளுமாறு ஆண்டவனை வேண்டி யெழுப்பும் நிலையில் அருளிச் செய்யப்பெற்றது திருப்பள்ளி யெழுச்சி என்னும் இத்திருப்பதிகமாகும்.

முன்னிலைப்பரவலாக அமைந்த இத்திருப்பதிகத்தில், திருப்பெருந்துறையுறை சிவபெருமான இறைஞ்சி எம் பெருமான் பள்ளி யெழுந்தருளாயே எனப் பாடல்தோறும் அடிகள் இறைவனை வேண்டிப் போற்றுதல் காணலாம். இவ்வாறே திருமாலடியாரான தொண்டரடிப்பொடியாழ்வார், திருவரங்கப்பெருமானைப் போற்றித் திருப்பள்ளியெழுச்சி