பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

பன்னிரு திருமுறை வரலாறு


தருபவரைத் தம் வலியினுற் கருதல் (திருவருட் பயன் 70)

எனவும் விளக்கங் கூறுவர் தாண்டவராயர்.

அன்புடைய அடியார்களுக்குக் காட்சி தந்து வெளிப் பட்டருளியும் தமக்கு ஓரளவு வெளிப்பட்டு முழுவதும் வெளிப்படாது மறைந்தும் நின்ற இறைவனது நிலையினை யெண்ணி ஏக்கற்ற உளத்தினராகிய அடிகள்,

" கரைசேர் அடியார் களிசிறப்பக்

காட்சி கொடுத்துஉன் னடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப்

பேசாதிருந்தால் ஏசாரோ "

எனப் பொன்னம் பலத்தாடும் அமுதினைப் போற்றியுள்ளார். பிரை - பாலைத் தயிராக்குதற் பொருட்டு அதன்மேல் தெளிக்கப்படும் மோர்த்துளி. பிரை சேர்ந்த பாலினகத்து நெய்யானது முழுவதும் வெளிப்படாது சிறிது புலப்பட்டுத் தோன்றுமாறு போன்று, இறைவனுகிய நீ எனக்குச் சிறி தளவே தோன்றி அருள் செய்து மறைந்துள்ளாய் என்பார், * பிரைசேர் பாலின் நெய்போலப் பேசாதிருந்தால் ' என்ருர்,

' விறகிற் றீயினன், பாலிற் படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினுல் முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே ” எனவரும் அப்பர் அடிகள் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கி யுணர்தற்குரியதாகும்.

திருவாதவூரடிகள் அம்பலக் கூத்தனை நோக்கி,

" இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்

என்றென் றேமாந் திருப்பேனை அருங் கற்பனை கற்பித்தாண்டாய்

ஆள்வாரிலி மாடாவேனே " என அன்பினல் வினவி வேண்டுவதாக அமைந்தது இப்பதி கத்தின் ஏழாந் திருப்பாட்டாகும். இதன்கண் அருங் கற் பனை' என்றது, யாவராலும் முயன்று பெறுதற்கு அரியதாய், இறைவனே பெருந்துறையிற் குருவாக எழுந்தருளிக் கற்பித்தருளிய சிவஞான உபதேசத்தின. ஆள்வாரிலி மாடு - மேய்ப்பாரில்லாத ஊர்க்காளே. மாடு ஆவேனே என் புழி ஆக்கச் சொல் உவமப் பொருள் குறித்து நின்றது. கண் கெட்ட, ஊர் ஏருயிங்குழல் வேனே (திருச்சதகம். 53)

என முன்னருங் கூறியுள்ளமை காண்க.