பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 盘常?

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் (9). நல்காதொழி யான் (10) எனவரும் திருப்பாடல்கள் இரண்டும் சிவஞானி களாகிய அடியார்களது அநுபவத்தை இனிது விளக்கும் நிலையில் அமைந்துள்ளன. சிரித்தல் உள்குவார் உள் கிற் றெல்லாம் உடனிருந்தறிதி என இறைவனது முற்றுனர் வினையும் அதனை அறியாது தாம் செய்த சிறுமையினையும் எண்ணி வெள்கிச் சிரித்தல். களித்தல் - சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்திருக்கும்’ நிலையை யெண்ணிக் களித்தல். தேனித்தல் - காணுங் கரணங்களெல்லாம் பேரின்பம் எனச் சிவபரம் பொருளையே பேணித் தியானித்து உள்ளம் அள்ளுறித் தித்திக்கப் பெறுதல்.

உஉ. கோயிற்றிருப்பதிகம்

கோயில் என்ற பெயர் தில்லைக்கே சிறப்பாக உரியதாயி னும் ஈண்டுக் கோயில் எனக் குறிக்கப்பெறுவது திருப்பெருந் துறையில் அமைந்த திருக்கோயிலே எனக் கருதவேண்டி யுளது. "செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப் பெருந் துறையுறை கோயிலுங்காட்டி" (திருப்பள்ளி யெழுச்சி - 8) எனவரும் அடிகளது வாய்மொழியும் ஏயுங் கோயிற்றிருப்பதிகம் பெருந்துறைத்தேசிகர் மோகம் இயம்ப லாகும் ' எனவரும் திருப்பெருந்துறைப் புராணத் தொடரும் இக்கருத்தினை வலியுறுத்தல் காணலாம். இப்பதிகத்தின் திருவுள்ளக்கிடை அனுபோக இலக்கணம்; சிவா.நூ பூதிக்கு அடையாளம் ' என்பதாகும். திருவாதவூரடிகள் தாம் பெற்ற சிவாநுபவமாகிய அதனேக்கொண்டு இறைவனது அருளா ரின்பத்தின் இயல்பினைப் புலப்படுத்தும் நிலையில் அருளிச் செய்யப்பெற்றது. இத்திருப்பதிகமாகும். இப்பதிகப் பாடல் கள் அந்தாதியாக அமைந்துள்ளன.

திருப்பெருந்துறையிற் குருவாய் எழுந்தருளிய பெரு மான், மாறி நின்று மயக்கிடும் ஐம்புல வழியை அடைத்து அடியாச்களின் உள் ளத்தினுள்ளே தேறலின் தெளிவாய் அமுதே ஊறி நின்று இன்பஞ் செய்யுந் திறத்தினையும், உணர்ந்தார்க்குனர்வரிய பரம்பொருள் அன்புடைய அடி யார்களது ஆவியோடு ஆக்கை புரைபுரைகனிய உள்ளத்தி னுள்ளே புகுந்து நின்று உருக்கிப் பொய்யிருள் கடிந்து மெய்ச்சுடராய்ப் பிறப்பறுக்கும் நன்மருந்தாய்க் குறைவிலா

12