பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

பன்னிரு திருமுறை வரலாறு


நிறைவாய்க் கோதிலா அமுதாய் மனத்திடை மன்னிச் சிந்தைவாய்ப் பாய்ந்து உள்ளே யெழுகின்ற சோதியாய், உலகப் பொருள்களெல்லாவற்றையும் தன்னகத் தடக்கிக் கொண்டு வெளிப்பட்டருளுந் திறத்தினையும், அத்தெய்வக் காட்சியை அடிகள் தம் கண்ணுரக் கண்டு மகிழ்ந்த திறத்தை யும், இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறே போன்று உள்ளத்தி னுள்ளே நின்ற அம் முதற் பொருளே ஆன்ம போதமாகிய நினைப்பறத் தாம் நினைந்து போற்றிய திறத்தினையும், மெய்ப்பொருளாகிய அது இவ்வுலகுயிர்களுக்கு ஆதார மாக வேருெரு பொருள் இல்லை யென்னும்படி பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படரொளிப் பிழம்பாய் யாண்டும் பரவி நிற்கும் பெற்றியையும், அம்முதற் பொரு ளின் இயல்பினை அதனது அருள் வெள்ளம் பாய்ந்த சீருறு சிந்தையாலன்றி ஆன்ம போதத்தால் அறிதல் இயலா தென்பதனையும், ஆதி நடு அந்தமாய்த் தீதிலா நன்மைத் திருவருட் குன்ருய்த் திகழும் அப்பரம் பொருள் அன்புடைய அடியார்களின் பாசப் பிணிப்பினை அறுத்து அந்தமொன் றில்லாப் பேரானந்தப் பெருவாழ்வை வழங்கியருளும் பெற்றியுடைய தென்பதனையும், எல்லாவுயிர்கள் மாட்டும் காரணமின்றிச் செல்லும் அப் பேரருட்கு உயிர்கள் எத்த கைய கைம்மாறுகளையும் செய்யவல்ல ஆற்றலுடையன அல்ல என்பதனையும் அடிகள் அநுபவத்தின் துணை கொண்டு இத்திருப்பதிகத்தில் இனிது விளக்கியுள்ளார்கள்.

இப்பதிகத்தின் முதற் றிருப்பாடலில் நான்காமடிக்கு ஈறிலாப் பதங்களாயவை கடந்த இன்பமே எனப் பாடங் கொண்டு, " முடிவிலாத உலகாயதன் முதல் சிவாத்துவித பத வீடுமாய் அவைக்கு அப்பாலாய் நின்ற பேரின்ப சொரு பமே " எனப் பொருளுரைப்பர் தாண்டவராயர். மூன்ருந் திருப்பாடலில் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே என வரும் தொடரில் பொய்யிருள் ' என்றது ஆணவமலத்தை. " பெத்தகாலத்து மேற்பட்டு நின்ற தனது சத்தி, முத்தி காலத்து ஒளிமுன் இருள் போல மடங்கிச் சூனியம்,போல் நிற்றல் மாத்திரையே பற்றி உள் பொருளாகிய ஆணவ மலத்தினைப் பொய்யிருள் என்ருர் " (சிவஞானபாடியம் சூத்திரம் 6.) என இத் தொடர்க்கு விளக்கம் கூறுவர் சிவஞான முனிவர். நிலையற்றமையாற் பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி (அவற்றை) மெய்யாக் கருதிக்