பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 47%

கிடக்கச் செய்தல் புற்றிப் பொய்ம்மையை விளக்கும் இருள் என்னும் பொருளில் ஆணவமாகிய இருள் மலத்தினைப்

பொய்யிருள் எனக் குறித்தார் எனினும் பொருந்தும்.

பொருளையுங் காட்டாது தன்னையுங் காட்டாது உயி ரறிவை மறைத்து நிற்கும் ஆணவமாகிய செறிந்த பேரிருளி லேயும் அதனுற் பிணிப்புற்ற உயிர்கள் தெளிவு பெற்றுத் தூய்மை பெறும் வண்ணம் இறைவனது சிவஞானமாகிய பேரொளி மேற்பட்டு விளங்குவதென்பார், திணிந்ததோர் இருளில் தெளிந்த துTவெளியே (A) எனப் போற்றியுள் ளார். இத்தொடர்ப் பொருளை விளக்கும் முறையில்,

" ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம், ஒன்று மேலிடிலொன்று

ஒளிக்கும் எனினும் இருளட ராதுள் ளுயிர்க்குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும்படிக் கொடி கட்டினனே "

(கொடிக்கவி. 1) எனவரும் பாடல் அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும். " இன்றெனக் கருளி இருள் கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்

நீயலாற் பிறிதுமற் றின் மை சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன் ருந்

திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்று நீ அல்லை அன்றியொன் றில்லை

யாருன்னை அறியகிற் பாரே " (?) எனவரும் திருப்பாடல், திருவாதவூரடிகள் இறைவனது திரு வருளாற் சுத்தாவத்தை அடைந்த நிலைமையினை இனிது புலப்படுத்தும் என்பர். நினைப்பற நினைதலாவது ஒரு பொருளைச் சுட்டியறியும் சுட்டுணர்வாகிய நினைப்பும் மறப் பும் அற்ற அதீத நிலையில் இறைவனது திருவருளில் அழுந்திநின்று உணர்தல். நினைப்பற உள்கில் என்பது திருமந்திரம் (2666). நினைப்பற் தினந்தேன் எனவரும் இத் திருவாசகப் பொருளைச் சிந்தித்துணர்ந்த தாயுமாளுர், நினைப்பறவே தானினேந்தேன் என்ற நிலை நாடி, அனைத்துமாம் அப்பொருளில் ஆழு நாள் எந்நாளோ (அறிஞர் உரை) எனக் கூறியுள்ளமை இங்கு உணரத்தக்க தாகும். இறைவன் ஒவ்வொரு பொருள் தோறும் நீங்கா

  • ஞாளுவரண விளக்கம். பக்கம் 541.