பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம் 3.81.

எனவரும் பத்தாந் திருப்பாடலாகும். இதன்கண் இறைவ னருளால் பாசங்களினின்றும் விடுபட்டு நல்லறிவு பெற்றுச் சுதந்தர நிலையில் உள்ள உயிர், சிவாநுடிவமாகிய பேரின்ப நுகர்ச்சி யொன்றுக்கேயுரிய தென்பதும், படைத்தல் முதலிய ஐந்தொழில் இயற்றும் இறைவனுக்கு உயிர்களாற் பெறத் தக்க பயன் எதுவும் இல்லை யென்பதும் தோன்ற, அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன், யாது நீ பெற்றது ஒன்று என்பால் ? என அடிகள் வினவிப் போற்றியுள்ளமை 岛露丁鑫矿GUs憩D。

நஞ்செயல் அற் றிந்த நாமற்றபின் நாதன்

தன் செயல் தானேயென் றுந்தீபற

தன்னையே தந்தானென் றுந்தீபற (6) எனவரும் திருவுந்தியார், அடிகளது அநுபவ மொழியை அடியொற்றியமைந்ததாகும்.

" உம்பர் பிரான் உற்பத்தி யாதிகளுக்குரியன், உயிர் தானும் சிவாநுபவம் ஒன்றினுக்கும் உரித்தே ” (சித்தியார் - சுபக் - 319) என்னும் உண்மை அடிகளது சிவாநுபவத்தில் வைத்து உணரத்தக்க முறையில் இத்திருப்பாடலில் அமைந் திருத்தல் காணலாம்.

ஆன்ம போதங்கெட்டு அருளின் வழியொழுகும் அடியார்

களது உள்ளத்தையும் உடம்பினையும் கோயிலாகக்கொண்டு அவர்தம் செயலெல்லாம் தன் செயலாகக்கொண்டு எழுந்து அருளியிருக்கும் இறைவனது இயல்பினே, சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான்.உடலிடங் கொண்டாய்.... யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே எனவரும் தொடரில் தமது அநுபவத்தின் வைத்து அடிகள் விளக்கியுள்ளார். "புகுந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனை” (6-27-4) எனவும், பொல்லாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே (6-95-4) எனவும் வரும் அப்பர் அருண் மொழிகள் இங்கு நினைக்கத் தக்கனவாகும்.

உங், செத்திலாப் பத்து திருவாதவூரடிகள், திருப்பெருந்துறை மேவிய சிவ பெருமானை நோக்கி, ஐயனே ஆன்மபோதம் முற்றும்கெட நினது திருவருளிலே தோயப்பெற்றிலேனே. அத்தகைய நற்பேற்றினை எளியேற்கு அருள்புரிவாயாக எனக் குறை யிரந்து வேண்டும் முறையில் செத்திலாப்பத்தாகிய இதனை