பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

பன்னிரு திருமுறை வரலாறு


அருளிச் செய்துள்ளார். ஈண்டுச் சாதல் என்றது, பசுபோதம் முற்றும்கெட இறைவனது திருவருளாகிய ஓங்குணர்வில் உள்ளடங்கித் தூங்குதல். அத்தகைய சாதல் எனக்கு வாய்க்கவில்லையே என ஏங்குதலாகிய ஒரு பொருள் நுதலிய பத்துப் பாடல்களையுடைமையால் இது செத்திலாப்பத்து’ என்னும் பெயருடையதாயிற்று.

" பதிகம் என்பது பல்வகைப் பொருளையும் தொகுதி யாகச் சொல்லுதல்' என்பவாகலின், செத்திலாமையாகிய ஒருபொருளே நுதலிய இது செத்திலாப்பதிகம் என்னது செத்திலாப்பத்து எனக் குறிக்கப்பெறுவதாயிற்று. அன்னைப் பத்து, குயிற்பத்து என முன்வந்தனவற்றிற்கும் அடைக்கலப் பத்து முதலாக யாத்திரைப்பத்து ஈருகப் பத்தென்னும் பெயருடன் பின்வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும்.

பசுபோதத்தை வெறுத்துச் சிவனருளில் தோயப் பெற்றிலேனே என ஏக்கற்று வருந்தும் ஆற்ருமையுணர்வு, பேரானந்தம் அளவறுக்கொண்ணுத மெய்யடியார்களிடத் தன்றி ஏனையோர்பால் தோன்ருதாதலால், திருவாதவூரடிகள் அத்தகைய ஆற்ருமை மீதுார அருளிச் செய்த செத்திலாப் பத்தென்னும் இதற்குச் சிவானந்தம் அளவறுக் கொண்ளுமை' என முன்ளுேர் கருத்துரை வரைந்தனர். சிவானந்தம் அணுகிச் செயிக்கப்படாமை எனப் பின் வந்தோர் விளக்கமுங் கூறினர். " ஆயும் பசுபோதம் முற்றுங் கெட வேண்டலே செத்திலாப்பத்தாகும் ' என்பர் திருப் பெருந்துறைப் புராண ஆசிரியர்.

தம்மை ஆண்டுகொண்டருளிய இறைவனைப் பிரிந்து கணமும் தரித்திருக்கப்பெருத திருவாதவூரடிகள், தமது ஆன்மபோதம் முற்றும் கெட்டொழிதல் வேண்டும் என இறைவனை வேண்டுபவர், அதற்கு நிலைக்களளுகிய தமது உடம்பும் பொன்றக்கெட இறந்துபடவில்லையே என இரங்கி இறைவனே நோக்கி முறையிடும் நிலையில் இதன் பத்துப் பாடல்களும் அமைந்திருத்தல் காணலாம்.

இதன் ஐந்தாந் திருப்பாடலில் உள்ள ஆட்டுத்தேவர், நாட்டுத்தேவர், சேட்டைத்தேவர் என்பன முறையே உயிர் களின் உள்ளத்தைப் பல துறைகளில் ஈர்த்து அலைக்கழித்து ஆட்டுவிக்கின்ற ஐம்புலன்களையும், வான நாட்டில் வாழ்வோ ராகிய இந்திரன் முதலிய தேவர்களையும், உலகங்களைத்